அகமதாபாத், ஜுன் 2-
வறுமையை சமாளிக்க முடியாமல் குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டம், பட்ரன் கிராமத்தி சேர்ந்த அரவிந்த் கோஹில்(42) கொத்தனாராக வேலை செய்து வந்தார். சில மாத காலமாக சரியாக வேலை கிடைக்காத காரணத்தால் குடும்ப செலவினங்களை சமாளிக்க முடியாமல் இவர் வறுமை நிலையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது.
தனது குடும்பத்தாருடன் அதே மாவட்டத்தின் ரலாஜ் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்ற அவர், கோயிலின் பின்புறம் தனது குடும்பத்தாருடன் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த சிலர் இது தொடர்பாக கம்பட் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்த நால்வரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அரவிந்த் கோஹில், அவரது மனைவி நைனா(38), மகன் மிடுல்(9), மகள் காமினி(6)ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கம்பட் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval