Sunday, June 15, 2014

வரலாற்று தவறுகள் திருத்தப்படலாம்




மக்கள் கண்களுக்கு உண்மை போல் தெரியும் வரலாற்றுத் தவறுகள் பின் வரும் காலங்களில் திருத்தப்படலாம். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இந்தத் தவறுகள் நிகழ்ந்துள்ளன. 1947 க்குப் பின் மக்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்த ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய முதலாளித்துவம் தனது வெற்றியை சாதித்துள்ளது. அதுதான் இப்போதும் நடந்துள்ளது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 534
பேரில் 422 பேர் கோடிஸ்வரர்கள் என்பதும் அதில் 186 பேர் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் கசப்பான உண்மை. இப்போது தெரிகிறதா இந்த மக்கள் எதையும் சாதிக்கவில்லை என்பது. மக்கள் தங்களை புரிந்து கொள்ளும் போது காலம் மாறும் காட்சி மாறும் கொள்கை மாறும் கோலம் மாறும் எல்லாமே மாறும். இங்கிலாந்து கத்தோலிக்க திருச்சபை பரிணாமக் கொள்கையை
உருவாக்கிய சார்லஸ் டார்வின் இறந்து 200 ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் அவருடைய கொள்கைகளை தவறாக புரிந்து கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டுள்ளதாம் ! ஆம் வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படலாம்.

Thank You : பொற்செழியன்

தகவல் ;N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval