Sunday, June 29, 2014

(E-mail) கண்டுபிடித்தது யார்...?


இ-மெயில் (E-mail) கண்டுபிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?



14 வயதே நிரம்பிய சிறுவன் வி.ஏ சிவா அய்யா துரை என்பவர் தான் இ-மெயிலை முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்.

இப்போதெல்லாம் மெயில் வந்துருக்குன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை.

மெயில் என்றால் இ-மெயில் தான் என்று ஆகிவிட்டது. பேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டாலும் இமெயில் என்பது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகி விட்டது.

முதன் முதலாக இமெயில் என்ற பெறரையும் Inbox, Outbox, Draft. Memo போன்ற அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டுபிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ சிவா அய்யா துரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.

ஆனால் குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினால், அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இ-மெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். 4 வருடம் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறையாக வி.ஏ சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான இ-மெயில்-ஐ அங்கீகரித்து காப்பிரைட் வழங்கியது.

நன்றி ; முக நூல் with Swami
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval