அணு ., இது கண்ணுக்கு தெரியாதது - ஆனால் கண்ணுக்கு தெரிகின்ற எந்த உயிரையும் பொசுக்கி விடக்கூடியது., இன்று நம் தமிழ் நாட்டில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் பற்றி பல சமூக ஆர்வலர்களும், சில புல்லுருவிகளும், தங்கள் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்., கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அவசியமா? இல்லையா? என்று.,
இதில் என் கருத்தை பதிவு செய்யவே எழுத்து.com தேர்ந்தெடுத்துள்ளேன். அணு உலை, அணு மின் நிலையம் இவ்விரண்டும் மிக ஆபத்தானவை, வாழும் மனித உயிர்களுக்கு மட்டுமில்லை, அதன் கொடூர முகம் பின்னால் வரும் மனித சந்ததியையும் மிக மிக பாதிக்கும்., அதற்கு ஒரே மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி., 1945 ம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க வான் படையினரால் இரு நகரங்களிலும்
அடுத்தது உலகின் முதல் அணு குண்டு தாக்குதல் நடை பெற்றது.
இதில் குண்டு வெடிப்பின் வெப்பத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி மடிந்து போயினர். அதன் பிறகு இன்று 66 ஆண்டுகள் கடந்தும் அதன் கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுறையினர் பலர் ஏதோ ஒரு ஊனத்தோடு தான் பிறக்கின்றனர்.,
இது அணு வின் கோர முகம்., ஆனால் இந்த அணு குண்டிற்கும், அணு மின் நிலையத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நிறைய., அணு குண்டு என்பது அழிக்க உபயோக படுத்தப்படுவது., அணு மின் நிலையம் என்பது ஆக்கப்பூர்வமான செயலுக்கு பயன்படுவது.,
இந்த வகை அணு மின் நிலையத்தினால் உள்ள பயன்களையும் ஆபத்துகளையும் பற்றி கூறுவதற்கு முன் மற்ற வகை மின் நிலையங்களை பற்றி சிறிது காண்போம்.,
நீர் மின் நிலையம்: இது நீரினால் மட்டும் எடுக்கப்படும் மின்சக்தியை சார்ந்தது., இது மழை காலங்களில் நல்ல நீர் வரத்து இருக்கும் சமயங்களில் மிகப் பெரிய நீர் தேக்கங்களிலோ, அணைகளிலோ நீரை தேக்கி வைத்து பின் அதிக அழுத்தம் உள்ள பொழுது தண்ணீரை சிறிய துவாரங்கள் மூலமாக வெளியேற்றுகையில், அதிக வேகமும் அழுத்தமும் அந்த இடத்தில உருவாகும், அப்பொழுது அந்த நீர் மின்
கடத்தியோடு இணைக்கப் பட்டிருக்கும் fan களில் பட்டு அது சுழலுகையில் dynamo செயல்பாட்டை போல் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீர் வரத்து இருக்கும் நாட்களில் மட்டும் சாத்தியம்.,
அனல் மின் நிலையம்: இங்கு வெப்பத்தினால் அதன் சக்தியினால் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது., இதற்கும் நீரின் அழுத்தமும், வேகமும் மேலும் அந்த நீரை மிக அதிகமாக வெப்பம் அடைய வைக்க எரி பொருளும் மிக அதிகாமா தேவை. ஒரு மணி நேரம் அனல் மின் நிலையம் மின் சக்தியை உற்பத்தி செய்ய 70 - 80 டன் வரை நிலக்கரி தேவை படுகிறது., அதன் உற்பத்தியும் நிலக்கரியின் வரவை பொறுத்துதான்
இருக்கிறது.,
காற்றாலை மின் நிலையம்: இது காற்று நன்றாக வீசும் பரந்த வெளிகளில், வயல் வெளிகளில், கடற்கரைகளில், மலையடிவாரங்களில், உயரமான தூண் போன்ற அமைப்பின் இறக்கைகளில் காற்று பட்டால் சுற்றுமாறு அமைக்கப்பட்டிருக்கும்., காற்று வீசி இறக்கைகள் சுற்றுகையில் அதனால் dynamo முறையில் மின் ஆற்றலை சக்தியாக எடுக்கலாம்., இதன் குறை காற்று நன்றாக வீசும் சமயங்களில், காலங்களில் மட்டுமே
இதம் உற்பத்தி இருக்கும்.,
இப்போது நமது அணுமின் நிலையங்களை பற்றி காணலாம்.,
அணுமின் நிலையத்தின் அபாயங்கள்: அணுக் கழிவுகளின் ஆயுள் மனித ஆயுளை விட மிக அதிகம், அதன் கதிர் வீச்சின் தாக்கம் சாதாரணமாக 10 லட்சம் ஆண்டுகளை கடந்தும் இருக்கும். இந்த அணு மின் நிலையங்களுக்கு மூலப் பொருளாக உபயோகப்படுத்தும் அணுவின் பெயர் - Uranium - 235 . இதன் கதிர்வீச்சின் அரை ஆயுள் 700 மில்லியன் ஆண்டுகள். அதாவது 70 கோடி ஆண்டுகள். அரை ஆயுள் இவ்வளவு என்றால், அதன் கதிர்வீச்சு
முழுவதுமாக வற்றிப்போக எத்தனை கோடி ஆண்டுகள் ஆகும்., அப்பப்பா. மேலும் இதன் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் கழிவுகளாக வரும் பொருள்களுக்கும் மூலப்பொருளின் அளவை ஒத்த கதிர்வீசும் அதற்க்கு உரிய ஆயுளும் இருக்கும்., அதில் plutonium எனப்படும் கழிவு தான் அணு குண்டு தயாரிக்க பயன் படும் மிக முக்கிய மூலப்பொருள்., எனவே அது எவ்வளவு அபாயகரமானது என்பதை நீங்களே
யூகித்துக்கொள்ளலாம்., இது வரை இரு இடங்களில் அணு மின் நிலையங்களில் விபத்து நடந்து இருக்கிறது., 1. 1979 இல், த்ரீ மைல் தீவு - அமெரிக்காவில் - உயிர் பலி / காயம் / கதிர் வீச்சு பாதிப்பு - யாருக்கும் இல்லை., 2. செர்நோபில் - அப்போதைய ஒருங்கிணைந்த ரஷ்யாவில் - உயிர் பலி - 2 உடனடியாக 28 பேர் சில நாட்களில் , காயம் - ஒன்றுமில்லை, கதிர்வீச்சு பாதிப்பு - 134 பேர். இதில் 28 பேர் தான் இறந்தது., இவை
எல்லாம் நாம் அணு பற்றிய அறிவியலில், ஆராய்ச்சியில் அதிக அளவு முன்னேற்றம் காணாத சமயத்தில், மூன்றாவதாக 2011 இல் ஜப்பானில் புகுஷிமா நகரத்தில் பூமி அதிர்ச்சி,சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு அணு மின் நிலையம்., இதில் கதிர்வீச்சினால் உயிர் பலியானது 10 பேர் என்றால் அதுவே அதிகம் என்கிறார்கள். எனவே இப்பொழுது பாதுகாப்பை குறித்து பாப்போம்.
அணு மின் நிலைய பாதுகாப்பு: ஒரு அணு மின் நிலையம் அமையப்பதர்க்கு முன் அதனை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள எந்த உயிரினங்களையும் அப்புறப்படுத்தி விடுவார்கள் - அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ஆவன செய்து கொடுத்துவிடும்., இப்படி அதை அமைப்பதற்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், ஒரு அணு உலை எவ்வளவு அதிகமான அதிர்வோ, வெப்பமோ, குளிரோ
தாக்கினாலும் சிறிதும் பாதிக்காத அளவிற்கு தான் அதன் கட்டமைப்பு இருக்கும். அதே போல் அணுவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு அதனால் விபத்து நேரும் அபாயம் உள்ள சமயங்களில், அணு உலை உற்பத்தியை தானே நிருதிக்கொல்வதை போலவும், மேலும் கதிர் வீச்சு வெளியேராதிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவே நடக்குமாறும் செய்யப்பட்டிருக்கும்.,
அப்படியும் கதிர்வீச்சு அபாயம் இருக்கும் எனில், சிமெண்ட் கலவை எனப்படும் concrete கொண்டு அந்த உலையை மொத்தமாக tomb போல மூடி விடுவார்கள்., பின்னர் அந்த இடத்தில் எந்த உயிர்களும் நடமாடும் விதம் அனுமதிக்க மாட்டார்கள்., மேலும் இந்த அணு மின் நிலையங்கள், குறுப்பிட்ட அளவுக்கு மேல் பூமி அதிர்வோ, சுனாமியோ ஏற்பட்டாலும் பாதிப்புக்குள்ளகாதவாறு தான் கட்டப்பட்டிருக்கிறது.
அணு மின் நிலைய தேவை: இது போன்ற அணு மின் நிலையம் அமைத்து அதன் மூலம் நாம் பெரும் அளவு 1000 மெகா வாட் என வைத்துக்கொண்டாலும், அந்த சக்தியை 20 ஆண்டுகளுக்கும் நாம் எடுக்க மொத்தமாக தேவை படும் மூலப்பொருள் அனல் மின் நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு தேவை படும் நிலக்கரியின் அளவே., எனவே நமது உற்பத்தி செலவும் குறையும், தடையின்றி மிசாரமும் கிடைக்கும்.,
எனவே இதன் மூலம் நான் கூறுவது என்னவென்றால் , அணு மின் நிலையத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் மக்களாகிய நமக்கு எண்ணற்றவை., இன்று மின்சாரம் இல்லாத ஒரு 10 நிமிடத்தை நம்மால் செரிக்க முடியாமல் அந்த நேரத்தில் மின்சாரம் எடுக்க என்னென்ன உபயோக படுதிகிறோம்., அணு ஆற்றல் சமுதாய முன்னேற்றத்திர்க்கேனில் மக்களே உங்கள் பேராதரவு அதற்கு கொடுங்கள்., அவளன்றி ஓரணுவும் அசையாது -
அணுவின் அசைவின்றி எதுவுமே அசையாது இப்புவியில்.,
Thank You : சோனி ஜோசப்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval