Saturday, June 14, 2014

ஆழ் கிணற்றின் ஆழமான உண்மைகள்


படித்தேன் பகிர்கின்றேன் ......... 

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு 

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. 

அந்த காலத்தில் எப்படி எந்த 
டெக்னாலஜியும் இல்லாம 
கிணறு வெட்டுனாங்க??? . . . 

கிணறு அமைப்பது என்பது அத்தனை 
எளிதானகாரியமில்லை . பலர்சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று. 

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் 
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் 
எளிய இலகுவான தீர்வுகள் இதோ. 


மனையின் குறிப்பிட்ட 
ஏதாவது ஒரு பகுதியில் 
அதிகளவு பச்சை பசேலென புற்கள் 
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் 
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் 
நீரூற்று தோன்றும் என்கின்றனர் . 

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல 
நீரூற்று என அறிவது எப்படி ? 

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட 
வேண்டிய நிலத்தில் முதல் நாள் 
இரவு தூவி விடவேண்டும். அடுத்த 
நாள் கவனித்தால் எறும்புகள் 
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் 
கொண்டுசென்று சேர்த்த 
அடையாளங்கள் , அதாவது தடயங்கள் 
இருக்குமாம் அந்த இடத்தில் 
கிணறு வெட்டினால் தூய 
சிறப்பான நன்னீர் கிடைக்கும் 
என்கிறார்கள் . 

சரி தூய நீரும் 
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் 
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் 
இருக்கிறது என்று அறிவது எப்படி ? 

கிணறு வெட்ட இருக்கும் நிலப் 
பகுதியை நான்கு பக்கமும் 
அடைத்து விட்டு பால் சுரக்கும் 
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய 
விட வேண்டும். பின்னர் அந்த 
பசுக்களை கவனித்தால் மேய்ந்த 
பின் குளிர்ச்சியான இடத்தில் 
படுத்து அசை போடுகின்றனவாம் . 
அப்படி அவை படுக்கும் 
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் 
கவனித்தால் அவை ஒரே இடத்தில் 
தொடர்ந்து படுக்குமாம் . அந்த 
இடத்தில் தோண்டினால் வற்றாத 
நீரூற்றுக் கிடைக்குமாம். 

அருமையான அனுபவங்கள் !!

தகவல் ; N.K.M. புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval