Monday, June 23, 2014

ஆஸ்துமாவை விரட்டும் பால் பொருட்கள்


பால் சத்துள்ள உணவு என்று வலியுறுத்தப் படுகிறது. பாலில் உள்ள சத்துப் பொருட்கள் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். இப்படி ஆரோக்கியமான உடலை தரும் பால் மற்றும் பால் பொருட்களை குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மற்றும் அதற்கு முந்தைய இளைப்பு வியாதிகளை விரட்டி அடித்து விடலாம். 
இது தொடர்பாக டச்சு நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2 வயது நிறைந்த 2, 978 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 1 வருட கால ஆய்வுக்குப் பிறகு அவர்கள் ஆஸ்துமா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது கீழ்க்கண்ட ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் கிடைத்தன.

கிரீம் மில்க், மற்றும் வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தினந்தோறும் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்சினையே இல்லை. சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலான பொருட்களை தினந்தோறும் சாப்பிடும் குழந்தைகளுக்கு இளைப்பு வருவதில்லை. இதற்கு காரணம் பாலில் உள்ள கொழுப்பு சத்துதான். ஆனால் பால் பொருட்களை சாப்பிடாத சிறுவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு இருந்தது
தெரியவந்தது.

மேலும் பிரவுன் பிரெட்டுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா, இளைப்பு வாய்ப்புகள் குறைந்து இருந்தது. தவிர பழச்சாறு, பழங்களை தினந்தோறும் சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டாலும் பெரிய வித்தியாசம் தெரிய வில்லை.

முடிவில் ஆஸ்துமா மற்றும் இளைப்பு நோய்களை பால் கொழுப்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், குழந்தைகளை அண்ட விடாமல் விரட்டி அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Thank You : கணேஷ் கா

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval