Saturday, June 21, 2014

திரும்ப செய் திருந்த செய்

Green rows on the field  Agricultural composition Stock Photo - 21603619
இந்த கட்டுரை முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் விவசாயின் நிலை இதை மட்டுமே கருத்தாய் எடுக்க பட்டது..

"" நாளிதழில் அடிக்கடி காணப்படும் ஒரு செய்தி,
விவசாயி வறட்சி காரணமாக தற்கொலை"


ஏன் இந்த நிலை நம் விவசாயிக்கு வருகிறது,அரசாங்க குற்றமா ??இல்லை அதிகாரிகளின் குற்றமா?? இல்லை விவசாயின் குற்றமா? இல்லை இயற்கையின் குற்றமா ??

விடை தெரியாத புதிராக இருந்தாலும் விடை நாம் தேடுவதில்லை என்பது உண்மையே,.

விவசாயத்தில் நட்டம் என்கிறது ஒருப்புறம்..சரியான மகசூல் தருவதில்லை என்கிறது மற்றொருபுறம்,,குறை தான் சொல்லுகிறோம் தவிர நிறை கிடைப்பதில்லை,சற்று தீவிரமாக ஆலோசித்தால் குற்றமும் விடையும் கிடைக்கும்..

இந்தியாவின் ஆணிவேர் கிராமம் என்று ஏன் சொல்லப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் விவசாயமே?? கடவுள் படைத்தான் என்றால் விவசாயி வாழவைப்பவன்..

விவசாயின் மகன் பொறியாளர் படிக்கச் வைக்க வேண்டும் என்று விவசாயின் ஆசை..தவறில்லை ஆனால் உன் மகனை முதலில் விவசாயத்தில் பொறியாளர் ஆக்கு,,அவனுக்கு விவசாயம் கற்றுக்கொடு..

நீ உருவாக்கும் நெல் தான் இன்று உலகமே உண்கின்றது ..நீ பயிராக்கும் உணவு தானியங்கள் தான் உலகம் உண்கின்றது ,,உனக்கு ஏன் கவலை ??

வறட்சி நிவாரண நிதி,அது செல்லும் உன் மகளின் திருமணத்திற்கு ..வெள்ள நிவாரண நிதி அது செல்லும் உன் மகனின் படிப்புக்கு,,நெல் சோளம் கரும்பு இவைகளும் உன் பிள்ளைகள் தானே?? அது தவற விட்டது உன் தவறல்லவா ?

இன்றைய இளசுகள் விவசாயம் என்றாலே வேடிக்கையாகவும் கேளிக்கை ஆகவும் பார்க்கிறது, யார் செய்வார் விவசாயம் ?? என்ற கேள்வி வேறு,,நகர்புற மக்களை விட்டு விடுங்கள் ,அவர்கள் வாழும் வாழ்க்கை வேறு,,

உன் அப்பன் கோடிஸ்வரன் என்று சொல்லிகொள்வதை விட உன் அப்பன் விவசாயி என்று சொன்னால்தான் நீ கோடிஸ்வரன் ,,ஆனால் இன்றைய பிள்ளைகள் தன்னுடைய தந்தை விவசாயி என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள், இதற்கு காரணம் நாம் தான்,

கணினி மின்சாரம் படித்தவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்றும் விவசாயம் ஏழை குடும்பத்தில் படித்தவர்கள் தகுதி அற்றவர் என்றும் பிரித்து பார்ப்பதுதான்,,ஏன் நாம் மனிதர்கள் இல்லையா??

இது பொதுவான உண்மை சூழ்நிலை ..முதல் குற்றவாளி சமுதாயம்.

இரண்டாவது குற்றவாளி -அரசாங்கம்..

ஆம் இவர்களும் விவசாயத்தில் கொள்ளை அடிப்பவர்களே.விவசாயின் வயற்றில் அடிப்பவர்களே..கொள்முதல் என்ற பெயரில் கொள்ளை,அவன் உழைப்பான் இவன் உட்காந்து உண்பான்,,ஆனால் இவன் காலடியை தான் நாம் சுற்ற வேண்டும் என்ற நிலை,

ஏன் இந்த நிலை ??நம்மிடம் இருப்பதாய் திருடி
நமக்கே அது இலவசமாய் தருவது,,நிலத்தை திருடி அதை வீடு கட்ட மனை.நீ சந்தோஷமாய் வீடு கட்டினாய்..வீடு முடிந்தபின் அந்த நிலத்தை யோசித்து பார் . யார் யாருக்கோ செல்ல வேண்டியை அரிசி மடியில் அல்லவா நீ வீடு கட்டி கொண்டுருக்கிறாய்,, ஆசை படு ..பேராசை படாதே ..

இலவசமாய் தருவது எல்லாம் உன் வீட்டு வரியும் உன் நில வரியும் தான், நீ ஆசை பட்டிருந்தால் உன் நிலத்தை காப்பதிருக்கலாம்..ஆனால் நீ பேராசை அல்லவா பட்டாய் ,,விளைவு நீ தூக்கில் தொங்கும் நிலை ..

மூன்றாம் குற்றவாளி - நாம் தான்,, மரத்தை அழித்தல் ,,காடுகளை வெட்டுதல், உன் தேவை அதனால் மரத்தை வெட்டுகிறாய் ..சரி நீ ஒரு மரம் வெட்டும் முன் 10 மரம் நட்டுவிட்டு வெட்ட வேண்டும்,.

ஒரு உதாரணம் - உன் வீட்டில் ஒரு ரோஜா செடி உள்ளது .அதில் வரம் ஒரு முறை ஒரு அழகான ரோஜா பூக்கிறது..அதை பறிக்கிறாய்,,செடி அழகு சென்று விடும்,,இதே உன் வீட்டில் 100 ரோஜா செடி உள்ளது ..வாரம் ஒரு முறை 100 பூக்கள் பூக்கும்,,நீ அதில் ஒன்றல்ல 10 பறித்தாலும் அழகு குறையாது..
இதுத்தான் உண்மை ..

நீ ஒன்றை வெட்டினால் அதற்கு மாறாக 10 மரங்களை நட்டுவிடு, மனிதன் இடத்தில் நீ ஏமாற்றி விடலாம்,,ஆனால் என்றும் உன்னால் இயற்கையை ஏமாற்ற முடியாது ..மரத்தை வெட்டுவதும் விவசாயிக்கும் என்ன சம்மந்தம் என்றால்?? நிச்சயமாக உண்டு. மரம் வெட்டுவதினால் மழை மட்டும் வராது என்று நினைத்தால் அது உன் முட்டாள் தனம்.

உன் சூழலில் உள்ள தட்ப வெட்பம் மாறுபடும், உன் மண் வளம் மாறும்,,நினைத்து பார். இன்று ஏதனும் மழைக்கு களிமண் கிடைகின்றதா ? என்று நினைத்து பார்,,மரம் வெட்டுவதினால் மழை மட்டும் அல்ல உன் மண் வளமும் கெட்டு போகிறது

மண் வளம் நன்றாக இருந்தால் தானே விவசாயம் செய்ய முடியும்..வானம் பார்த்து மழை வரும் என்று கூறும் மக்கள் இன்று வானம் பார்த்து மழை வருமா ??என்று கேள்விகேட்க நாம்தான் காரணம் ..

ஒரு மரம் அல்லது இரண்டு மரம் தானே வெட்டுகிறோம் இதில் என்ன ஆக போகின்றது ?? என்று நீ நினைத்தால் உன்னை போல் 10 பேர் நினைத்தால் 20 மரம் வெட்டப்படும் ,,100 பேர் நினைத்தால் 200 மரம் ,,1000 பேர் நினைத்தால் 2000 மரம்..


மற்றும் ஒரு உண்மை கதை- நம் நாடு விவசாயத்தில் நன்கு முனேற்றம் அடைந்த பொழுது அந்நிய நாடுகள் ஒரு சில விஷ கைகளை இந்தியாவின் மேல் தூவினார்கள் ..அதன் பெயர்தான் நாம் அனைவரும் சொல்லும் கருவை மரம்..முள் செடி.ஆனால் அதில் இருக்கும் கருவைகாய் பறித்து ஆட்டிற்கு உணவை ஆக்கியவன் நம் விவசாயிதானே..விஷத்திலும் உணவை கண்டுபிடித்தான்.

நம்மவர்களை சுற்றி இருக்கும் ஒரு சிறு சிறு காரணம் தான் நாம் விவசாயத்தில் முன்னேறாமல் சாகும் நிலை ஏற்பட காரணம்,,இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் ,,ஆனால் விடை நாம்தானே ??

உன்னை நம்பு, உன் வியர்வையை நம்பு, இயற்கையை நம்பு..நீ முன்னேறலாம்,,காரணம் சொல்லி தூங்கி கொண்டிருந்தால் விழிப்பதற்கும் காரணம் தேவைப்படும்

வறட்சி வர காரணம் மழை இல்லாமை..மழை இல்லாததற்கு காரணம் மரம் வெட்டுதல் ,,மரம் வெட்ட காரணம் உன் தேவை ,,உன் தேவை வர காரணம் உன் ஆசை,,உன் ஆசை வர காரணம் உன் அண்டைவீடுகாரன்,,இப்படி சொல்லிகொண்டே போகலாம் ,,ஆனால் முடிவு ??

இன்றும் பலர்க்கு தெரியாத ஒரு விஷயம் உண்டு..விவசாய துறையில் படிக்கும் மாணவர்களுக்கு 2005 ம் ஆண்டு அரசு 17 ஆசிரியர்கள் பணிவிடம் நிறைவேற்றியது,,ஆனால் 2012 வரை 7 பணிவிடம் இன்றும் காலியாகதான் உள்ளது ,,புரிந்து கொள்ளுங்கள் மக்களே ////


திரும்ப செய் திருந்த செய்


[ சிறு குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துகள் என் ஆனதில் பட்டவையே ஆகும்..ஆகையால் உங்கள் கருத்துகளும் எதிர் விமர்சங்களும் வரவேற்கப்படும்..ஏன் என்றால் நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ஒரு கப்பல்துறை பொறியாளர் ]

--ஜில்லுனு ஒரு ஷாகுல்--

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval