Sunday, February 21, 2016

இந்தியா வம்சாவளி அடையாள அட்டை மார்ச் 31க்கு பிறகு செல்லாது ! புதிய அட்டை பெறலாம்

Daily_News_2143627405167
இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.இதற்கு பதிலாக தற்போது ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  துபாய் இந்திய துணை தூதரகத்தில் விசா வழங்கும் துறையின் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.
இதற்கு பதிலாக தற்போது வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு  அறிமுகபடுத்தியுள்ள புதிய நடவடிக்கை மூலம்  பழைய நடைமுறை வரும் மார்ச் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மார்ச் 31க்கு பிறகு பழைய அடையாள அட்டை செல்லாது. எனவே இந்த புதிய அட்டை பெற விரும்புபவர்கள் இங்குள்ள இந்திய  தூதரகத்தில் விண்ணபித்து கொள்ளலாம். இந்த புதிய அட்டை வருவதற்கு  சுமார் 2 மாதம் வரை ஆகலாம் எனவே இதனை பெற விரும்புபவர்கள்  கடைசி நேரத்தில் வந்து விண்ணபிப்பதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். இந்த அட்டை கிடைப்பதற்கு சுமார் 30 நாட்கள் ஆகும் விண்ணப்பங்கள் அதிகம் ஆகும் போது தாமதம் ஆக வாய்ப்புள்ளது. தங்களது அடையாள அட்டை காலவதியாவதற்குள் புதிய அட்டை பெற விண்ணபிக்க வேண்டும்  இந்த அட்டையானது இந்திய வம்சாவளியினர் வெளிநாட்டு பாஸ்போர்டை பெற்றவர்களுக்கே தேவைப்படும்.
இவர்கள் இந்த அட்டையை பெற்றிருந்தால் இந்தியாவுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த அடையாள அட்டை பெறாமல் அவர் இந்தியாவை சேர்ந்தவராக இருப்பினும் சிங்கப்பூர்,கனடா,மலேசியா,அமெரிக்கா,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்டை பெற்றிருந்தால் அவர் இந்தியாவுக்கு விசா பெற்றெ செல்ல முடியும்  .எனவே  சிரமத்தை தவிர்க்கும் வகையில் உரிய அடையாள அட்டையை முன்னரே பெற்று கொள்ள கேட்டு கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval