Friday, February 12, 2016

வேலூரில் விழுந்தது விண்கல்லே... ஒருவர் பலியானது வரலாற்றில் இதுவே முதன்முறை!





வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் விழுந்தது விண்கல் என ஆய்வுக்குழு முடிவுக்கு வந்திருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதோடு,
விண்கல் விழுந்து ஒருவர் உயிரிழந்தது வரலாற்றில் இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலுள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வானத்திலிருந்து கீழே விழுந்த மர்மப் பொருள் (விண்கல்) குடிநீர்த் தொட்டி அருகே பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் குடிநீர் தொட்டி அருகே நின்றிருந்த கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் காமராஜ் படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஓட்டுநர் சுல்தான், தோட்டத் தொழிலாளர்கள் சசிகுமார், முரளி, கல்லூரி மாணவர் சந்தோஷ் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து கிடைத்த பொருள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. விண்கல் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச முகமைகள் விரிவாக விசாரணை செய்து வருவதாகவும், வேலூரில் விழுந்தது விண்கல் என ஆய்வுக்குழு முடிவுக்கு வந்திருப்பதாகவும், விண்கல் விழுந்து ஒருவர் உயிரிழந்தது வரலாற்றில் இதுவே முதல்முறை என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.courtesy;vikadan





 


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval