Sunday, February 7, 2016

தொண்டை புற்றுநோயால் குரலை இழந்த நோயாளிகளுக்கு 50 ரூபாயில் கருவி

தொண்டை புற்றுநோயால் குரலை இழந்த நோயாளிகளுக்கு 50 ரூபாயில் கருவி; பெங்களூர் மருத்துவர் சாதனை!
பெங்களூர் HCG புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் விஷால் ராவ். மனிதாபிமானமிக்க இவரது முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொண்டை புற்றுநோயால் குரல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தக்கூடிய கருவி, மருத்துவத் துறையில் மகத்தான சாதனை.
பொதுவாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருத்தப்படும் இது போன்ற கருவிகள் 20 ஆயிரத்திலிருந்து கிடைக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும்.

ஆனால் டாக்டர் விஷால் கண்டுபிடித்துள்ள கருவி சிலிக்கன் என்ற மூலப்பொருளால் ஆனது. 25 கிராம் எடை கொண்டது. விலை ஐம்பது ரூபாய் மட்டுமே.
வியாபாரமாகிவிட்ட மருத்துவ துறையில் இவரைப் போன்ற நல்ல மனிதர்களும் பலர் உள்ளனர்.
அறிவியலோடு; மனிதாபிமானமும் சேரும்போதுதான் இது போன்ற அதிசயங்கள் நிகழும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval