Wednesday, February 17, 2016

இந்திய மருத்துவ மாணவர், இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் சடலமாக காணப்பட்டார்


israel_flag_rep
இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டு உள்ளார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ராஜ்குமார் ராஜா (வயது 27), டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் அவருடைய அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த திங்கள் கிழமை அன்று ஆய்வகத்திற்கு மாணவர் வரவில்லை, இதனையடுத்து பல்கலைக்கழக ஆசியர்கள் அவருடைய அறையின் கதவை தட்டிஉள்ளனர். எந்தஒரு பதிலும் இல்லாத நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது, சடலமாக காணப்பட்டு உள்ளார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளனர்.
“விசாரணையில் எந்தஒரு குற்றமும் தெரியவரவில்லை, மாணவரின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளது.” என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று பல்கலைக்கழகம் மற்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval