Wednesday, February 17, 2016

ரூ.251க்கு ஸ்மார்ட்போன்

Daily_News_6690136194230
ரூ.251 விலையில் மலிவான ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  ரிங்கிங் பெல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ப்ரீடம்251 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் அறிமுக விழாவில் மத்திய  அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்.
இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல டிஸ்பிளே, 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 3ஜி, 1 ஜிபி ரேம், 8 ஜிபி போன் மெமரி, 32 ஜிபி வரை மெமரி  நீட்டிக்கும் வசதி, 0.3 மெகாபிக்சல் முன்புற கேமரா, 3.2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 1,450 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
இந்த மொபைலை http://freedom251.com இணையதளத்தில் இன்று காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி இரவு 8 மணி வரை ஆர்டர்  செய்யலாம். ஆர்டர் செய்பவர்களுக்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மொபைல்கள் அனுப்பி வைக்கப்படும் என இந்திய நிறுவனமான ரிங்கிங் பெல்  தெரிவித்துள்ளது.
இந்த போனில் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் பயன்பெறும் வகையிலான ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப்  உள்ளிட்ட சமூக வலைதள ஆப்ஸ்கள் இதில் உள்ளன. ஓராண்டு உத்தரவாதத்துடன் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் பழுதடைந்தால் சரி செய்ய  நாடு முழுவதும் 650 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது சந்தையில் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை சுமார் ரூ.1,500ஆக உள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உலகிலேயே  மலிவு விலையாக ரூ.999 க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அது இன்னும் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் நேற்று  அறிமுகம் செய்யப்பட்ட ப்ரீடம்251 உலகிலேயே மலிவான ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. – See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=196854#sthash.7r5MKTfT.dpuf

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval