சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடைசியாக பிப்ரவரி 1-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. மத்திய அரசு சுங்க வரியை உயர்த்தியதால் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகளும், டீசல் 3 காசுகளும் மட்டுமே குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.59.95 ஆக உள்ளது. இன்று நள்ளிரவு முதல் ரூ.59.63க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை ரூ.44.68ல் இருந்து ரூ.44.96க்கு உயர்த்தி விற்பனை செய்யப்படும்
சர்வசேத சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்ததால் 6-வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval