பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, பூல்ஜர் கிராமம். இந்த கிராமத்தில், 107 ஆண்டுகளாக, இங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லை.
அக்கிராமத்தில் குற்றங்களே நடைபெறுவதில்லை. கிராமத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வசிப்பதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை. பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்; யாரும் பலாத்காரம் செய்யப்பட்டது கிடையாது. திருடர்களின் பயம் அறியாததால், திருட்டு என்பதையே இக்கிராம மக்களுக்கு தெரியாமல் உள்ளது. தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை, கிராம சபை முன் வைக்கின்றனர். அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் அதிருப்தி அடைவதில்லை. கிராம சபையின் முடிவை எதிர்த்து, இதுவரை யாரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தது கிடையாது.
இதுகுறித்து, கோர்பா மாவட்ட காவல் துறை அதிகாரி கூறியதாவது: பூல்ஜர் கிராம மக்கள், இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது. கோர்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அனைத்து கிராமங்களிலும், குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், பூல்ஜர் கிராம மக்கள், விதிவிலக்காக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்காக, மாநில அரசு இந்த கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து, விருது வழங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval