Sunday, February 28, 2016

நோக்கியா, பிளாக்பெர்ரி கருவிகளில் ‘வாட்ஸ்ஆப்’ சேவை நிறுத்தம்; வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்பு

201602290036088280_Preparing-for-T20-World-CupCourt-will-not-help-the-Asian_SECVPF
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்ஆப்’ வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. 2009-ம் ஆண்டு ‘வாட்ஸ்ஆப்’ அறிமுகமான போது பிளாக்பெர்ரி, நோக்கியா கருவிகளே 70 சதவீதம் இருந்தன. ஆனால், தற்போது கூகுளின் ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ், மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களே 99.5 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவையெல்லாம் அப்போது 25 சதவீதம் கூட இல்லை.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிளாக்பெர்ரி, பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, விண்டோஸ் 7.1, ஆன்ட்ராய்டு 2.1 மற்றும் 2.2 ஆகிய இயங்குதளங்களில் ‘வாட்ஸ்ஆப்’ தனது சேவையை நிறுத்த உள்ளதாக அதனுடைய வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. எனவே, பழைய இயங்குதளங்களில் உள்ள ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் சீக்கிரமாக அப்கிரேடு செய்து கொள்வது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval