இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்திருப்பது ஏன், இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று சென்னைப் பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் இராம சீனுவாசன் அவர்களிடம் கேட்டோம்.
கருப்பு பண முதலைகளுக்கு ஆப்பு !
“இது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் கருப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் குறைக்கப்படும். பொதுவாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், கள்ள நோட்டுகள் அடிப்பவர்களுக்கும் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் வைத்திருப்பார்கள். அதே போல் தீவிரவாதிகளும் பெரும்பாலும் 500, 1000 ரூபாய் தாள்களில் தான் கையிருப்பு வைத்திருப்பார்கள். இப்போது இந்த நோட்டுகள் செல்லாது என்ற செய்தி அவர்களுக்கு வைத்த ஆப்பு போலத்தான்.
இதனால் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை வங்கியிலும் போட முடியாமலும், கையில் வைத்திருக்க முடியாமலும் அல்லாட வேண்டியதுதான். அப்படிக் கொண்டு போய் வங்கியில் செலுத்தினால் அதற்கான கணக்குகளை வரித்துறைக்கு அளிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமானால் பிணத்தை எரிப்பதற்கு விறகுக்கு பதிலாக செல்லாத இந்த நோட்டுகளை இனி பயன்படுத்தி கொள்ளலாம்.
சாதாரண மக்களுக்கு சிக்கல் !
ஆனால், சாதாரண மக்களுக்கு இது பெரும் சிக்கலை சில நாட்களுக்கு ஏற்படுத்திவிடும். எல்லோரும் இனிமேல் 100, 50, 10 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் எங்காவது ஊருக்கோ, ஏதேனும் கடைக்கோ போக வேண்டும் எனில் பணத்தை கொண்டு செல்ல பர்ஸெல்லாம் பத்தாது. மஞ்சப்பையோ, சாக்குப் பையோதான் தேவை” என்றார்.
பிச்சைக்காரன் படத்தில் பிச்சைக்காரர் பாத்திரத்தில் இருக்கும் ஒருவர் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஒரே வழி 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதுதான் என்று கூறுவார். உண்மையில் அது இப்போது நிஜமாகி இருக்கிறது.
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval