கிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர நிர்வாகம் மறுத்ததால் அவரை முதல் மாடிக்கு அவரின் மனைவி இழுத்தே சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தின் குண்டக்கல் அரசு மருத்துவமனைக்கு, கடும் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற தனது மனைவியுடன் சென்றுள்ளார் ஸ்ரீநிவாச்சாரி என்பவர்.
அவரால் நடக்க முடியாத நிலையில், அவரை தூக்கிச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார் அவரின் மனைவி, எனினும் நிர்வாகம் அதற்கு மறுத்ததால், செய்வதறியாது திகைத்த அப்பெண், சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின், அவரே மருத்துவம் பார்க்கப்படும் முதல் தளத்திற்கு, ராம்ப் எனப்படும் சாய்வு தளம் மூலம் தன் கணவரை முதல் மாடி வரை இழுத்துச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
சம்பவம் நடந்த போது அந்த மருத்துவமனையில் 5 ஸ்ட்ரெச்சர்கள் இருந்த போதிலும், அப்பெண்ணிற்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் இதைப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval