இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட செய்தியில், இலங்கை தமிழர்களின் வீரத்தின் விதையாகவும் வீழ்ந்து விடாத லட்சிய நெருப்பாகவும் எம்மை வழி நடத்தும் தேசியத்தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த தமிழர்களின் பெருமையையினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் புகைப்படத்தை வங்கியே தனது ஏ.டி.எம் காட்டில் வெளியிட்டுள்ளதா, அல்லது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை ஏ.டி.எம் கார்டுகளில் அச்சிடும் வசதியை அளித்து, அதன்மூலம் பிரபாகரன் புகைப்படத்தை புலிகள் ஆதரவாளர்கள் அச்சிட்டுக் கொண்டார்களா என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval