Saturday, November 26, 2016

டே கேர் காப்பகம்: 10 மாத குழந்தை அடித்து சித்தரவதை


மும்பையில் ஒரு காப்பகத்தில் கொடுத்து சென்ற குழந்தையை அடித்து சித்தரவதை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழந்துள்ளது.

நவி மும்பை, கார்கர் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணி புரிந்து வந்த அப்சனா சாயிக் மற்றும் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரியங்கா நிகம் (34) ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருசிதா சின்ஹா என்ற பெண் கடந்த திங்கட் கிழமையன்று தனது 10 மாத குழந்தையை பூர்வா டே கேட் காப்பகத்தில் கொடுத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். 

பின்னர் வேலை முடித்து வந்து குழந்தையை அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்று குழந்தையை கவனித்த ருசிதா குழந்தைக்கு பல இடங்களில் அடிபட்டிருப்பதை பார்த்தார். 
இதையடுத்து, காப்பகத்தில் எனது 10 மாத குழந்தையை அடித்து உதைத்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 சிசிடிவி கேமரா வீடியோக்களை சோதனை செய்தனர், அதில் குழந்தையை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval