Wednesday, November 23, 2016

ஆந்திராவில் பழைய ரூபாய் நோட்டிற்கு புதிய நோட்டை மாற்றித் தரும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


பழைய ரூபாய் நோட்டிற்கு புதிய நோட்டை மாற்றித் தரும் கும்பல் கைதுபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மக்கள் மாற்றி வருகின்றனர்

எனினும் வங்கியில் பழைய நோட்டுக்களை மாற்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் பல்வேறு மாற்று வழியில் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனிடையே ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கும்பல் ஒன்று கமிஷன் பெற்றுக் கொண்டு பழைய நோட்டுக்களுக்கு புதிய நோட்டுக்களை மாற்றித் தருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval