Tuesday, November 29, 2016

சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா?

டாப் பிரியாணி
பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா..,
கல்யாண பவன்  - எழும்பூர் :
இஸ்லாமிய திருமணங்களில்  சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாணி 160 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாய்க்கும் வயிறு நிறைய சாப்பிடலாம். 
அல் தாஜ் - ராயபேட்டை :
ராயப்பேட்டை, பெசன்ட் சாலையில் இருக்கிறது அல் தாஜ் பிரியாணி கடை. சிக்கன்  80 ரூபாயிலிருந்து, 130 ரூபாய் வரையில் கிடைக்கிறது. மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் முந்திக் கொள்வது நல்லது. வாணியம்பாடி பிரியாணியை டேஸ்ட் செய்ய நினைப்பவர்கள் அல் தாஜுக்கு ஒரு ரவுண்ட் போய் வரலாம். "சென்னையிலேயே நாங்க மட்டும் தான் குறைவான விலைக்கு  கொடுக்குறோம்" என்கிறார் கடையின் உரிமையாளர்.  

டாப் பிரியாணி
ஆற்காடு பிரியாணி - போரூர் : 
இந்தியாவிலேயே ஆற்காடு பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். ஆற்காடு வரைக்கும் போய் சாப்பிட முடியாதே என வருந்துபவர்களுக்காகவே இருக்கிறது போரூர் ஆற்காடு பிரியாணி. சிக்கன் பிரியாணி 110 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. "20 வருடங்களாக நடத்தி வருகிறோம். இந்த பகுதியில யாரை கேட்டாலும் எங்க கடை பேரை தான் சொல்லுவாங்க." என பூரிக்கிறார்  கடையின் உரிமையாளர்.
பாரடைஸ் - பெருங்குடி : 
ஓ எம் ஆர் ரோட்டில் இருக்கும் ஐ.டி பார்க் இளசுகளின் பேவரைட் பிரியாணி ஸ்பாட் பாரடைஸ். கிட்டத்தட்ட 63 வருட பாரம்பரிய சுவையை கொண்டது பாரடைஸ் ,பெருங்குடியில் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.இருந்தாலும் கூட்டம் அள்ளுகிறது. சிக்கன் பிரியாணி 170 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாயிலிருந்தும் விலை ஆரம்பிக்கிறது.
உமர் பிரியாணி - கிரீம்ஸ் சாலை : 
அண்ணா சாலையிலிருந்து கிரீம்ஸ் சாலைக்குள் நுழைந்தால் அஜீஸ் முல்க் முதல் தெருவில் இருக்கிறது உமர் பிரியாணி. குறைந்த விலையில் சுவையான சிக்கன் பிரியாணிக்கு பெஸ்ட் சாய்ஸ் உமர் பிரியாணி கடை.
அக்பர் பிரியாணி கடை - பெரியமேடு : 
பெரியமேடு சாமி தெருவில் அமைந்திருக்கிறது அக்பர் பிரியாணி கடை. 1978 லிருந்து அக்பர் என்பவரால் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில்  ஃபுல் கட்டு கட்டலாம். இரண்டு பிளேட்களில் வைத்து தருகிறார்கள். சிக்கன் பிரியாணி 100 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி வரைதான் பிரியாணி கிடைக்கும் மக்கா..!!    
 
யா - முஹைய்யதின்  பிரியாணி - பல்லாவரம் :
பல்லாவரம் சுற்றுவட்டாரத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுகிறார்கள் யா- முஹைய்யதின் கடைக்கு. டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றால் சுடச் சுட ஒரு பிடி பிடிக்கலாம். மட்டன் பிரியாணி 160 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது.  
ஆசிப் அண்ட் பிரதர்ஸ் - ஆலந்தூர் : 
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை தாண்டி தாம்பரம் செல்லும் வழியில்  திரும்பினாள் சில நூறு அடிகளிலேயே வரவேற்கிறது ஹாசிப் அண்ட் பிரதர்ஸ். சென்னையின் பல பகுதிகளிலும் இதன் கிளைகள் இருக்கிறது. வழக்கமாக சாப்பிடும் பிரியாணியை தாண்டி ஸ்பெஷலாக ஏதாவது சாப்பிட நினைப்பவர்கள் முஹல் பிரியாணியை டேஸ்ட் பண்ணலாம். பிரியாணியின் விலை 160 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.    
சார்மினார் பிரியாணி - ராயபேட்டை : 
ராயப்பேட்டை பெசன்ட் சாலையிலேயே அமைந்திருக்கிறது சார்மினார் . நின்று கொண்டு தான் சாப்பிட முடியும் என்றாலும்  டேஸ்ட் அந்த  சிரமத்தை மறக்கச் செய்யும். அரை பிளேட் சிக்கன் பிரியாணி 60 ருபாய் தான். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் வாகனங்களை நிறுத்துவதில் மட்டும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.  
தலப்பாக்கட்டி - ராமாபுரம் :
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் எனச் சொல்லலாம். திண்டுக்கல்லில் நாகசாமி நாயுடு என்பவரால் 1957ல் ஆரம்பிக்கப்பட்டது தலப்பாக்கட்டி பிரியாணி. அதன் தனித்த சுவையால் இன்றும் பலரை ஈர்த்து கொண்டிருக்கிறது. ராமாபுரத்தை ஒட்டி இருக்கும் பல ஐடி ஊழியர்களுக்கு தலப்பாக்கட்டி தான் வீக்எண்ட் ஸ்பெஷல்.   
டாப் பிரியாணி
புகாரி - ராமாபுரம் :  
சென்னையில் பிரியாணிக்கு பிரபலம் என்றால் அது புகாரியால் தான். புகாரி பிரியாணிக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம். சென்னையின் பல பகுதிகளிலும் புகாரியின் கிளைகள் இருக்கின்றன.   
  
ஐலாபுரம் பிரியாணி - போரூர் : 
போரூர் கோபால கிருஷ்ணா திரையரங்கத்துக்கு அருகே இருக்கிறது . சிக்கன் பிரியாணி 170 ரூபாய்க்கும், சிக்கன் பாட் பிரியாணி 230 ரூபாய்க்கும் கிடைக்கிறது.  மட்டன் பிரியாணி 260 ரூபாய்க்கும் கிடைக்கிறது. காரசாரமான ஆந்திரா சுவைக்கு ஐலாபுரம் பிரியாணியை நாடலாம். 
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval