Tuesday, November 1, 2016

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ ஆபத்து உங்களுக்கு தான்!


பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும்.

நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.

* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு, இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

* எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

* தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது அது பற்களின் எனாமலை பாதித்துவிடும், பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.

* நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா(Salmonella), இ.கோலி(E.Coli) பக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.

* நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval