இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.
மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும், இப்போதிருக்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புற்றுநோயாகவும் காணப்படுகின்றது. கதிர்வீச்சு, chemotherapy ஆகியவற்றால் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்தமுடியும்.
இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் தாக்கிய பெண்களில் உற்பத்தியாகும் ஐடி4 (ID4) எனும் புரதத்தைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழிமுறையைக் கண்டுபிடித்ததன் மூலம் மருந்துகளால் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைக்கு நோயாளியை மாற்ற முடியும் என கிருதின் தெரிவித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்புக்காக, பிரிட்டனில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானிகளுக்கான The Big Bang Fair என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களில் கிருதினின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒருவருக்கு Alzheimer எனப்படும் நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கான முதலாவது அறிகுறி தென்படுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே அதைக் கண்டறியும் சோதனை முறையைக் கண்டு பிடித்ததற்காக, கடந்த ஆண்டு புGoogle Science Fair விருது கிருதினுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval