ஜியோ சிம் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களது adhaar கார்டு கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் . அங்கு ஷோ ரூமில் உங்களது ஆதார் கார்டு நம்பர் ஸ்கேன் செய்து உங்களது கைரேகை வாங்கப்படுகிறது.
அதன் பின்னர் உங்களுக்கு ஜியோ சிம் தர படுகிறது. எல்லாம் சரி. இதில் மிக பெரிய ஒரு விஷயம் உங்களால் கவனிக்க முடிந்ததா?
ஒருவரது ஆதார் எண் கடையில் உள்ள மெஷினில் input கொடுத்ததும் உங்களது finger print authentication செய்யப்படுகிறது.
அதாவது உங்களது ஆதார் விபரம் சரியாக இருந்தால் மட்டுமே உங்களது கைரேகை சரி பார்க்க இயலும். இதில் என்ன உள்ளது ? Relaince கம்பெனி காரனுக்கு ஒட்டு மொத்த இந்தியாவின் ஆதார் விபரங்கள் சரி பார்க்க தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
இதுவரை அரசு துறைகளில் கூட ஆதார் எண் xerox வாங்கப்படுகிறதே தவிர அதன் authentication சரி பார்க்கும் வசதி இல்லை. ஆனால் jio சிம் காரன் தான் ஆதார் database பயன் படுத்தி சிம் கார்டு தருகிறான்.
கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தயார் செய்த ஆதார் database இப்போது யாருக்கு பயன்படுகிறது பாருங்கள்-
ஜியோ சிம் வாங்கும் ஒவ்வொரு இந்தியனின் முழு ஜாதகம் கொண்ட தலை எழுத்து அம்பானி கையில்.-??
ஆதார் விவரம் ரகசியமாக வைக்கபடும் என்ற அரசின் உறுதி என்னானது?? எப்படி ஆதார் விவரம் அம்பானியிடம் சென்றது?
தோழர்கள், விபரம் தெரிந்தவர்கள் கருத்துபதிவிடவும்.
courtesy;liveday
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval