Thursday, November 24, 2016

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
►கறுப்பு பணத்தையும், கள்ள நேட்டுக்களையும் ஒழிப்பதற்காகவும், தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பதற்காகவும்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததாகக் பிரதமர் கூறும் காரணத்தை தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய மன்மோகன் சிங், ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றிய விதத்தில் மிகப்பெரிய நிர்வாகச் சீர்கேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறினார்.

►பிரதமர் மோடி கேட்டுக்கொள்ளும் 50 நாட்கள் என்பது மிகச்சிறிய காலம்தான் என்றாலும் ஆனால் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த 50 நாட்களும் கடும் சித்ரவதை காலம் என்று கூறிய மன்மோகன் சிங் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மிகவும் அபாயகரமான அளவிற்கு மோசமாகி விடும் என்றார்.

►இந்த இடையூறுகள் குறுகிய காலம்தான் நீண்ட கால அடைப்படையில் நாட்டிற்கு இந்த திட்டம் நன்மை பயக்கும் என்று கூறப்படும் வாதத்தை  ஏற்க மறுத்த மன்மோகன் சிங், நீண்ட காலம் என்றால் எவ்வளவு நீண்ட காலம் என்று கேள்வி எழுப்பினார். அனைவரும் இறந்த பிறகு மத்திய அரசின் நடவடிக்கை யாருக்கு பலன் அளிக்கும் என்றும் மன்மோகன் சிங் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

►இப்போது நடந்து உள்ள மாற்றம் ரூபாய் நோட்டு மாற்றம் வங்கி அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அரித்துவிடும் என்று கூறிய  மன்மோகன் சிங், வங்கியில் தான் டெபாசிட் தொகையை பொதுமக்கள் திரும்பப் பெற முடியாத நாடு ஒன்றை பிரமர் மோடியால் அடையாளம் காட்ட முடியாமா என்று கேள்வி எழுப்பினார்.

►மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம்  மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று கூறிய மன்மோகன் சிங், ரூபாய் ஒழிப்பு விவகாரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலுக்கு மத்திய அரசின் நடவடிக்கை வழிவகுப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.

►மக்கள் மீது தவறிழைப்பதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்  அளிப்பதுபோல் மத்திய அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.

►பிரதமர் மோடியின் நடவடிக்கையால் நாட்டின் வருமானமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2 சதவீதம்வரை சரிவடையும் என்று கூறிய மன்மோகன் சிங், இந்த அளவு குறைத்து மதிப்பிடப்பட்டதுதான், மிகைப்படுத்தப்பட்டது அல்ல என்றார்.

►பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார் என மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.  நாட்டில் 90 சதவீத தொழிலாளர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்களாக இருப்பதையும் 55 சதவீதம் பேர் வேளாண்துறையை சார்ந்திருப்பதையும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.

►கறுப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க நடைமுறைக்கு சாத்தியமான வழியை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் தற்போது சந்திக்கும் சிரமங்களிலிருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval