Tuesday, November 15, 2016

தேசிய நதிகளை இணைக்க சிறப்பு குழு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி,

உச்சநீதிமன்ற தீர்ப்புப்பின்படி நதிகளை இணைக்க சிறப்பு குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாட்டில் கடுமையாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சில வாரங்களில் சரியாகிவிடும் என்று கூறப்பட்டாலும் பொருளாதார ஆய்வுப்படி பணத்தட்டுப்பாடு பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைப்பெற்றது. அப்போது, நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்தும். மேலும்  தேசிய நதிகளை இணைக்க சிறப்புக்குழு அமைக்கவும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவும், கோதுமை குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ 1,625 ஆக உயர்த்தவும், எண்ணெய் தயாரிப்பு பயிர்களுக்கு குறைந்த விலைக்கு மேல் போனால் போனஸ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நதிகளை இணைப்பது குறித்து சிறப்பு குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval