500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை பயன்படுத்தவதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், போன்றவற்றில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
courtesy;News 7 Tamil
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval