இக்கட்டான இந்த சூழலில் ...
இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது..!
கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது.
அந்த சர்ச்சின் பாதிரியார்தான் , இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த ஞாயிறு காலை பிரார்த்தனை முடிந்த பின் , சற்று நேரம் அமைதியாக இருந்த அந்த சர்ச் பாதிரியார் , சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார் . அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டு கொண்டன.
“ அன்பானவர்களே .. நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.”
பாதிரியார் இப்படி சொன்னவுடன் , மக்கள் கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.
தொடர்ந்தார் பாதிரியார் :
“பணம் தேவைப்படுபவர்கள் , தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.. நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ , அப்போது உண்டியலில் போட்டால் போதும்..”
அவ்வளவுதான் ...!
அறிவிப்பைக் கேட்ட அனைத்து மக்களும் ஒன்று திரண்டனர் .
உண்டியல் திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள் , உண்டியலில் இருந்த ரூ.500, 1000 தவிர மீதி இருந்த அத்தனை பணமும் காலியாகிவிட்டது.
“ஏன் பாதர் இப்படி செய்தீர்கள் ...?” என்று கேட்டதற்கு , அந்த பாதிரியார் கண் கலங்க சொன்ன பதில் :
“ என்ன செய்வது..? இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்கள் அரிசி வாங்க கூட சில்லறை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . மக்கள் அரிசி இல்லாமல் சிரமப்படும்போது , ஆண்டவருக்காக உண்டியலில் லட்சக்கணக்கான பணம் இருந்து என்ன பயன் ?”
.
“சரி பாதர்...யார் யார் எவ்வளவு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்பது...?”
“ தெரியாது. அதற்கான கணக்கையும் நான் வைத்து கொள்ளவில்லை. இறை நம்பிக்கை உள்ள எல்லோரும் , தாங்கள் எடுத்த பணத்தை உண்டியலில் திரும்பவும் கொண்டு வந்து போடுவார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது ..”
# ஆள்பவர்கள் எப்படி இருந்தாலும் சரி ...
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்..”
எத்தனை இது போல செய்ய பேர் தமிழ் நாட்டில் தயாராக உள்ளனர். எவனாவது நமக்கு போடமாட்டானா என ஏங்குகிறவர்கள் சிந்திக்க...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval