கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னால் மந்திரி இப்ராஹிம் குஞ்சு அவர்களின் உறவினர்கள் மதுரை அரவிந் மருத்துவமணைக்கு வரும் வழியில் திருமங்குளம் கல்லுப்பட்டி அருகே எதிரே வந்த மினிலாரி மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.
..
சம்பவ இடத்திலேயே .ஷர்ஜில் சலீம்,நூர்ஜகான்,ஹதிஜா,ஹஜினா ஆகிய 4பேர் பலியாகினர்...
பாத்திமா ஆயிஷா பலத்தகாயத்துடன் திருமங்குலம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
விபத்துகுறித்து கேரள முன்னாள்மந்திரி இப்ராஹிம்குஞ்சு அவர்களின் தனிஅலுவலர் என்னை தொடர்புகொண்டு விபத்துகுறித்து தெரிவித்தார்.தகவலறிந்த நான் MSF பக்ரூதின், ஷாருக்கானுடன்,அப்போலோ மருத்துவமனண விரைந்து சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா,ஆயிஷா குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்ககோரிவிட்டு சிகிச்சைபெற்றுவரும் பாத்திமா,ஆயிஷா அவர்களின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தேன்.கேரளத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் விபத்தில் பலியாகிய 4பேரின் உடல்களை இன்றே போஸ்ட்மாடம் முடித்து கேரளத்துக்கு அனுப்பிவையுங்கள் என்றனர்.நான் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களை தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்தேன்..சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்கள் மாவட்ட கலெக்டர்,சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகளிடத்தில் தொடர்புகொண்டு 4பேரின் சடலங்களை உடனே கேரள அனுப்புமாறு தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினரின் தொடர்புக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்குமாவட்ட தலைவர் அப்துல்காதர் ஆலிம்,மாவட்ட பொருளாளர் நஜீப்,மாவட்ட துணைதலைவர் என்ஜினியர் ஜாகீர்,வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ஏ.கே.முகைதீன்,நான் மற்றும் MSFஷாருக் உசிலம்பட்டி அரசு மருத்துவமணை விரைந்து காவல்துறை அதிகாரிகளிடத்தில் விபரத்தை கூறினோம்.சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களின் சீறிய முயற்சியினால் மாலை 6:30மணிக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு போஸ்ட்மாடம் பன்னப்பட்டு இரவு 8மணியளவில் 4பேரின் சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் கேரள அனுப்பிவைக்கப்பட்டது...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval