Friday, September 29, 2017

டாக்டர்.மன்மோகன் சிங் :

Image may contain: 1 person
1991 ஆம் ஆண்டு தென் டெல்லி தொகுதியில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் பத்திரிக்கையாளர் குஷ்வந் சிங் அவர்களிடம் கடன் வாங்கி அந்த தேர்தலை சந்தித்தார். என்றைக்கு நம் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த தேர்தலில் தோற்று போனார். அதற்கு பின் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு காலம் சென்ற முன்னால் முதல்வர் திரு.ஹித்தேஷ்வர் வீட்டை தேர்தல் ஆனையத்தின் விதிமுறை படி வாடகைக்கு எடுத்து அந்த வீட்டிற்கு இன்று வரையும் தவறாமல் வாடகை கொடுத்து வருகிறார். பொருளாதார நிபுணர், எளிமையானவர், அதிகம் பேசாதவர், ஆடம்பர ஆர்ப்பாட்ட அரசியலை விரும்பாதவர்..
ஆம் அவர் தான் டாக்டர்.மன்மோகன் சிங்!
இன்றைய பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறது சாக்வால் மாவட்டம். அதன் எல்லையோரப் பகுதியில் இருக்கும் பல குக்கிராமங்களில் ஒன்று காஹ். அந்த கிராமத்தில் ஒரு துணி வியாபாரிக்கு மகனாக பிறந்தவர் தான் மன்மோகன் சிங். மின்சார வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் பள்ளி படிப்பை தொடங்கி இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைகழகம், இங்கிலாந் கேம்பிட்ஜ் பல்கலைகழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் என உலகின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் பொருளாதாரம் படித்தார்.
அவர் வாழ்க்கையில் முதல் திருப்பம் 1966ல் நடந்தது. அவரது பொருளாதார அறிவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் அது, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் வளர்ச்சி கருத்தரங்கில் மூன்று வருடங்கள் பணியாற்றும் வாய்ப்பு. அதை ஏற்றுக் கொண்டார். பொருளாதாரம் சீர்குலைந்த நாடுகள் என்று பலதரப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை உலகளாவிய நோக்கில் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மூன்றாண்டு முடியும் தருவாயில் ஐ.நா செயலாளரிடம், எனக்குரிய இடம் இந்தியாதான் என நினைக்கிறேன், பணிக்காலம் முடிந்ததும் இந்தியா திரும்புவதே என் விருப்பம் என்று அவர் தெரிவித்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று நாடு திரும்பினார் மன்மோகன்.
இந்தியா திரும்பிய மன்மோகன் சிங் Delhi school of economicsல் பேராசிரியராக தன் பணியை தொடங்கி, திட்டக்குழு துணை தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சர் பிறகு பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமர் என்று படிப்படியாக தன்னுடைய அறிவாற்றலாலும் ஆளுமை திறனாலும் அந்த பதவிகளை அடைந்தார். எழுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை வடிவமைத்தவர். குறிப்பாக 1991 ஆம் ஆண்டு அவர் ஒரு நெருக்கடியான சமயத்தில் இந்தியாவின் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பு ஏறத்தாழ காலியாகிவிட்டது, பணவீக்கம் அதிகரித்து விலைவாசி கடுமையாக உயர்ந்தது, பெட்ரோலை இறக்குமதி செய்ய கையில் பணமில்லை, இந்தியாவில் உள்ள தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்க வேண்டிய நிலை. மொத்தத்தில் அன்று இந்தியாவின் பொருளாதாரம் ஐ.சி.யு வில் இருந்தது.
அந்த ஐந்தாண்டுகளில் மன்மோகன் சிங் சமர்ப்பித்த மத்திய பட்ஜெட்டில் படிப்படியாக பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. வங்கி முதலீடுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. வறுமை ஒழிப்புக்காக புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரிவிகிதங்கள் சீரமைக்கப்பட்டன. சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அடிப்படை கட்டுமானத்துறை முதலீடுகளுக்கான சலுகைகள் வழங்கப்பட்டன. பொருளாதார சீர்த்திருத்தக் கொள்கைகள் குறித்து தனி மனிதராக இருந்து எல்லா வற்றுக்கும் பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருந்தார் மன்மோகன் சிங்.
"இந்திய பொருளாதாரம் பெரும் சீர்குலைவை சந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில், உலகமயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால், பொருளாதாரம் சீரடைந்திருக்காது. என்னை முதலாளித்துவ ஆதரவாளர் என்று சொல்கிறார்கள், அது சற்றும் உண்மையல்ல, நான் ஒரு சோஷலிஸ்ட். எல்லோரும் சமம் என்ற கொள்கை கொண்ட ஷோஷலிஸ்ட், எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்ற ஷோஷலிஸ்ட் அல்ல " என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங்...
இந்தியாவில் நேருவிற்கு அடுத்து ஒரு திறமையான துடிப்பு மிக்க பிரதமர் மன்மோகன் சிங் தான் என்று தயங்காமல் கூறுவேன். அவர் பிரதமராக இருந்த போது செயல்படுத்திய திட்ட்கள் அனைத்தும் உலகமே வியந்து பாராட்டியவை. MNREGA, RTI ,Aadhaar , GST , Right to Education, Food security act, Land bill, Lokpal, Street Vendors Act, Forest Act, Mangalyaan, சந்திராயன், Direct benefit transfer scheme, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது, கல்விக் கடன் போன்ற எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் பிரதமராக இருந்த போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது , அவர் பேசவே மாட்டார், அவர் ஒரு Silent PM என்று. அந்த பத்தாண்டுகளில் ( 2004- 2014) வரை மூவாயிரத்திற்கு மேல் உரை நிகழ்த்தியிருக்கிறார். பாராளமன்றத்தில் எல்லா விவாதங்களிலும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் போது ஒவ்வொரு முறையும் விமானத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் பழக்கத்தை வைத்திருந்தவர்.
சுருக்கமாக டாக்டர்.மன்மோகன் சிங் :
*பொய் பேசாதவர், தவறான தகவல்களை மேடையில் பேசாதவர்.
*சுய விளம்பரங்களை விரும்பாதவர், தன்னலமற்றவர்.
*எளிமையானவர், பத்து லட்சத்திற்கு ஆடைகளை அணியாதவர்.
*மனைவியை கைவிடாதவர், தான் ஒரு Humble backgroundல் இருந்து வந்ததை என்றைக்கும் மேடையில் அது பற்றி சொல்லாதவர்.
*சக அமைச்சர்களை மதிப்பவர், ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் போது தன் சக அமைச்சர்களின் கருத்துக்களை கேட்பவர்.
*தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்காதவர்.
*ஜனநாயக பன்புகளை கொண்டவர், நான் என்று இல்லாமல் நாம் என்று பேசுபவர்.
*பாராளுமன்றத்தை கண்டு ஓடாதவர்.
*சட்டமன்ற தேர்தலுக்கு தெருத் தெருவாய் பிரச்சாரம் செய்யாதவர்.
*மக்களை மதமாகவும், சாதியாகவும் பிளவுபடுத்தும் அரசியலை செய்யாதவர்.
*நாட்டின் வளர்ச்சியில் அரசியலை புகுத்தாதவர்.
இந்த மனிதரை தான் திருவாளர். மோடி "நைட் வாட்ச் மேன், சேலை கட்டிக் கொள், திருதுராஷ்ட்ரன் என்று வசை பாடினார். ஆனால் மன்மோகன் சிங் அதற்கு ஒரு வார்த்தை கூட பதில் அளிக்கவில்லை. பிரதமராக தன்னுடைய கடைசி செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது " Do you think you have been a weak PM ? ""History will be kinder to me than the media " என்று பதில் சொன்னார். இன்னொன்றையும் சொன்னார் " It would be a disaster for the country to have Narendra Modi as PM " இந்த இரண்டும் இன்று நிருபனமாகி உள்ளது. இன்றைய பாசிச இந்துத்வா மோடி அரசை விமர்சிக்க எல்லா தகுதியும் அவருக்கு உண்டு, ஆனாலும் அவர் அதை செய்ய மாட்டார். அடுத்து வரும் காங்கிரஸ் அரசு இவர் பெயரில் திட்டங்கள், விருதுகள், பல்கலைகழகங்கள் நிறுவ வேண்டும். அதுவே நாம் இவருக்கும் செய்யும் நன்றி கடன்.
 Dr.மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று வாழ்த்துவோமே...
~ தம்பி விஜய் ராம்தாஸ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval