தாய்-தந்தையைக் கொள்வதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதையும் மிஞ்சும் அளவுக்கு கணவனை... மனைவியும் மகனும் சேர்ந்து, கூலிப்படையைக்கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், கலியபெருமாள். இவருக்கு சொந்தமாக 30 ஏக்கருக்கும் மேல் நிலம் மற்றும் பைனாஸ் தொழில் செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெகதாம்பாள் அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களும் மதம் மாறி, கடலூரிலும் தஞ்சையிலும் வசித்துவருகின்றனர். கலியபெருமாள், 25 வருடமாக ஜெகதாம்பாளைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். அவர்களது பிள்ளைகள் யாரும் தொடர்பில் இல்லை. இதற்கிடையில், அதே ஊரைசேர்ந்த சரோஜா என்பவரை கலியபெருமாள் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 8 மகள்களும், அண்ணாதுரை என்கிற ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்து, தனிதனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது மனைவி சரோஜா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், கலியபெருமாள் சொத்துக்களோடு சகல வசதிகளுடன் வசித்துவந்தார். மாலையில், ஃபைனாஸ் பணம் வசூல் செய்துவிட்டு வீடு திரும்பிய கலியபெருமாள், சாப்பிட்டுவிட்டு மாடி அறையில் தூங்கச் சென்றார். காலை நீண்டநேரம் ஆகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கலியபெருமாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப்பதிந்து, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, நித்யா ஆகியோர் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர். ஷாஜகான், கலியபெருமாள் இருவரின் செல்போன் அழைப்புகளைப் பார்த்ததில் இருவருமே அதிகமுறை பேசியிருக்கிறார்கள்.
போலீஸார், சந்தேகத்தின் பேரில் முதல் மனைவி ஜெகதாம்பாளை விசாரித்தபோது, ''எங்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. எல்லாத்தையும் இரண்டாவது மனைவியிடம்தான் கொட்டிக் கொடுத்தாரு என்று சொன்னபோது... காவல்துறை உஷாராகி, ஜெகதாம்பாளை துருவித்துருவி விசாரித்ததில், கூலிப்படையைக்கொண்டு நாங்கள்தான் கொலைசெய்தோம் என ஒப்புக்கொண்டனர். கலியபெருமாளின் முதல் மனைவி ஜெகதாம்பாள், அவருடைய மகன் ஷாஜகான் என்கிற அன்பழகன் மற்றும் சேத்தியாதோப்பில் உள்ள கூலிப்படைகளான அன்பழகன், குலோத்துங்கன் ஆகியோரைக் கைதுசெய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval