மும்பை-அகமதாபாத் இடையே வேகமான ரயில் மற்றும் அதிவேக ரயில் என இரு புல்லட் ரயில்களை இயக்க இருப்பதாக, இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த மும்பை - அகமதாபாத் ரயில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, வரும் 14-ம் தேதி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,10,000 கோடி. இதில், ரூ.88,000 கோடி ஜப்பானிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது.
வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில், மும்பை - அகமதாபாத் இடையேயான தூரத்தை 2:58 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில், எட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிவேக ரயில், பயணதூரத்தை 2:07 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில், மிக முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். புல்லட் ரயில்களுக்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையேயான விமானக் கட்டணமே தற்போது 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval