Thursday, September 21, 2017

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர்.

இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர். இன்று அது அனைத்து உலகிலும் ஒரு பொதுவான உணவாக ஆகிவிட்டது. அது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த உணவாக கருதப்படுகிறது.
இந்தியாவின் பல பாகங்களில், உணவுடன் தயிர் சேர்ப்பதனுடன் முடிவடையும். பழங்காலம் தொட்டே, தயிரானது ஜீரணம் மற்றும் அமில எதிர்விளைவுகளில் இருந்து நிவாரணம் பெற நல்ல பயனுள்ள பொருளாகும் என்று நம்பப்பட்டது.
தினமும் சாப்பிட்டால் :
ஒரு குவளை தயிரில் 100-150 கலோரிகள், 3.5 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் சர்க்கரை, 8 முதல் 10 சதவீதம் புரோட்டீன் ஆகியவை இருக்கும். இதே ஒரு குவளை தயிரை நீங்கள் உண்ணும் போது, தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது.


தயிர் :
பாலைவிட அதிகமான ஊட்டச்சத்து ஆதாயங்கள் அதிலிருந்து கிடைக்கும். மிதமான லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம்.
ஏன் என்றால் பாலில் காணப்படும் லாக்டோசிலுள்ள ஆக்சிஜன் ஒடுக்கபடுவதால், பாதிக்கப்பட்ட ஒருவரின் பாலில் காணப்படும் சர்க்கரையை அவர்களாகவே பதப்படுத்த வேண்டிய தேவை தவிர்க்கப்பட்டு விடுகிறது.
பாக்டீரியா :
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும்.
எலும்புத்தேய்மானம் :
பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.
தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது.
ஜீரணம் :
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.
கூடாது :
தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.
இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல் போன்ற நோய்கள் உண்டாகும்.
சர்க்கரை நோய் :
தயிர் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதை 24 சதவீதம் தவிர்க்கப்படும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் விட்டமின் டீ, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. அதோடு நொதித்தலின் பலனாக உருவாகும் விட்டமின் கே, ப்ரோபயாடிக் பாக்டீரியா சர்க்கரை நோய்க்கு எதிராக போராடும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval