Thursday, September 21, 2017

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!   பப்பாளி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி மற்றும் அன்னாச்சிப்பழத்தை சாப்பிடக்கூடாது.

நம் அனைவருக்கும் பிடித்த உணவு பப்பாளி. சிலர் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை விரும்புவார்கள். பப்பாளியை சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம். அல்லது ஜூஸாக செய்தும் கூட சாப்பிடலாம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பப்பாளியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உள்ளது. இதன் இலைகளுக்கு டெங்கு காய்ச்சலை எதிர்க்கும் தன்மை உள்ளது.
பப்பாளி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி மற்றும் அன்னாச்சிப்பழத்தை சாப்பிடக்கூடாது.
கருக்கலையும் அபாயம் 
பப்பாளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் கூட, இதன் வேர் மற்றும் விதைகள் கருக்கலைப்பிற்கு காரணமாகின்றன. பழுக்காத பப்பாளி கருப்பை சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். கர்ப்பகாலத்தில் இந்த பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது.
உணவுக்குழாயை பாதிக்கும்
 நீங்கள் பப்பாளி மிகச்சிறந்த பழம், எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டால் உங்களது உணவுக்குழாயை இது பாதிப்படைய செய்யும். எனவே ஒருநாளில் ஒரு கப்பிற்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடாதீர்கள்.
பாலூட்டும் தாய்மார்கள்
 பப்பாளி இலைகள் மிகவும் பிரபலமான ஒன்று. இதில் பாப்பெயின் என்ற மூலப்பொருள் உள்ளது. இது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கிறது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாடுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பப்பாளியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும், குழந்தை பிறந்த சில நாட்களுக்கும் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.
அலர்ஜி 
பப்பாளிப்பால் பட்டால் அலர்ஜி உண்டாகும். எனவே பழுக்காத பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இரத்த சர்க்கரை அளவு
 பப்பாளி இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை உடையது. நீங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டி மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது பப்பாளியை சாப்பிடுவது அபாய நிலைக்கு தள்ளும்.
விந்தணு பாதிப்பு 
பப்பாளியின் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மூலப்பொருளானது, ஆண்களின் கருவுரும் தன்மையை பாதிக்கும். மேலும் இது விந்தணு இயக்கத்தையும் பாதிக்கும்.
நச்சுத்தன்மை
 பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் மிக அதிகமாக சாப்பிட்டால் நச்சுத்தன்மையும் ஏற்படலாம். ஏனெனில் இதில் பென்சில் மற்றும் ஐசோடியோசனானேட் கலவை உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval