Tuesday, September 26, 2017

மசாஜ் செய்து கொண்டதால் டில்லி வாலிபர் குமாருக்கு நிகழ்ந்த பயங்கரம்!*

வழக்கமாக முடிதிருத்தும் சலூன்களில் Head Massage எனப்படும் தலை மசாஜ் செய்யும் போது கழுத்தை சொடக்கு எடுப்பார்கள்.

இவ்வாறு மசாஜ் எடுத்து கொண்ட குமார் என்ற தில்லியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பிரீனிக் நரம்பு (Phrenic nerve) துண்டான நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் செயற்கை சுவாசம் செலுத்தியே உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த வலது மற்றும் இடது பிரீக் நரம்புகள் உதரவிதானத்தின் (Diaphragm) செயலை தூண்டி (Motor information) அதன் நிலையை (Sensory information) மூளைக்கு சொல்லும் பணியை செய்கின்றன.

இந்த பிரீனிக் நரம்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உதரவிதானம் இயக்காமல், அதனால் நுரையீரல் இயக்கம் நின்று பொய் சுவாசிப்பது மிகவும் சிரமமாகி, உடலில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயுராபத்தான நிலைக்கு பாதிக்கப்பட்ட வரை இட்டுச்செல்லும்.

பிரீனிக் நரம்புகள் துண்டிக்கப்பட்டால் அவை மீண்டும் வளர்ந்து இணையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எனவே மசாஜ் என்ற பெயரில் சொடக்கு போடுவதை கண்டிப்பாக தவிருங்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொடக்கு போடுவதை 1400 ஆண்டுகளுக்கு முன் தடை செய்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிவார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த கட்டளைக்கு பின்னால் உள்ள நன்மைகளை தற்போது தில்லியில் நடந்த துயர சம்பவம் உறுதிப்படுத்துவதாக உள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval