1. நாம் உபயோகிக்கும் மொபைல் போன்களில் நாம் அழித்த (Delete செய்த) புகைப்படங்களை Recovery Software மூலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதை திரும்ப கொண்டு வர முடியும். மனிதா உன்னுடைய படைப்பே இத்தகையது என்றால் ?? உன்னை படைத்தவன் எத்தகையவன் ?? சிந்திக்க மாட்டாயா ??
.
இவ்வுலகில் நாம் மரணித்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனாலும் நமது உடலில் உள்ள ‘#அஜ்புஸ்ஸனப்’ ‘குத எலும்பு’ (#Coccyx) எனும் முதுகந்தண்டின் நுணிப்பகுதி அழிவதில்லை. #விஞ்ஞானி “ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வு கூடத்தில் நெருப்பால் கரிக்கவும், மற்றும் பல அமிலங்களை கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் ஆனால் முடிவில் அவருக்கு கிடைத்தது தோல்வியே!
2. பல கோடி துளைகளை உடைய உடலை உன்னால் படைக்கவே முடியாது.
நமது தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம் தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.
சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது நலத்தை பேணுவதற்காகவே. உண்மையில் இவை நம் சிறுநீரகத்தின் வேலையை குறைக்கவே செய்கின்றன.
3. தலைகீழாக நின்று உணவு உண்டாலும் அது குடலை சென்றடையும்படியான தொண்டை குழாயை உன்னால் படைக்கவே முடியாது.
4. ஓய்வொடுத்து வேலை செய்யும் இதயத்தை மனிதா உன்னால் படைக்கவே முடியாது. இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழி முறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.
.
5. உடலினுள் நுழைந்த தூசி, மாசு மற்றும் நச்சுக்கிருமிகள் போன்றவற்றை தும்மிலின் மூலம் வெளியேற்றி நோய்களிலிருந்து பாதுகாக்கும் நுரையீரலை மனிதா உன்னால் படைக்கவே முடியாது.
6. ஓய்வெடுத்து வேலை செய்யும் மூளையை மனிதா உன்னால் படைக்கவே முடியாது. நாம் தூங்கும் போது மூளையும் உறங்கிவிடும்.கரு உருவாகி 4 வாரங்களில் மூளை உயிரணுக்களான நியூரோன்கள் நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல. இந்த வேகத்தில் செயல்படும் ஒரு கணிணியை உன்னால் படைக்க முடியாது.
.
7. மூளையை போல வேலை செய்யும் முதுகுத்தண்டை மனிதா உன்னால் படைக்கவே முடியாது.
வலியென்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் ஏற்படும் வலியை அதனால் உணர முடியாது.
.
ஆம் நம் மூளை உறங்கும் போது அதனுடைய வேலையை தண்டுவடம் தான் செய்கிறது. ( For example : தூக்கத்தில் கொசு கடித்தால் அதை கொல்வது.)
.
8. 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகரும் மூக்கினை மனிதா உன்னால்படைக்கவே முடியாது.
.
9. வெளிப்புறம் கடினத்தன்மையும் , உட்புறம் மென்மையும் கொண்ட உன் உடலே கட்டமைக்கப்பட்டுள்ள உறுதியான எலும்புகளை மனிதா உன்னால் படைக்கவே முடியாது.
.
10. இறந்த பின் வேலை செய்யும் உறுப்புகளை மனிதா உன்னால் படைக்க முடியாது.
இறந்தபின் ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
.
11. இந்த பூமியில் வாழ்ந்த இனி வாழப்போகும் எவருடைய விரல் ரேகையும் ஒன்றோடொன்று ஒத்துப்போகாத விரல் ரேகைகளை உன்னால் படைக்கவே முடியாது.
இன்னும் நீங்கள் எந்த படைப்பாளனும் இல்லாமல் தானாகத் தான் வந்தோம் என நம்புகின்றீர்களா ??
.
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
தகவல் ;ஜாகிர் ஹுசைன்
Malaysia
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval