Friday, September 8, 2017

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்படாது ; அறிவிப்பு வெளியானது..

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்பட வேண்டும் என்ற கோஷமும் உயர்ந்து உள்ள அதேவேளை ஆங்சாங் சூகியின் நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது.
ஆனால் நோபல் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஒலவ் ஜோல்ஸ்டட், நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபலோ அல்லது நோபல் அறக்கட்டளையோ பரிசு வழங்கப்பட்டவர்களின் கவுரவத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளை வகுக்கவில்லை எனவும் எனவே நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டவரிடம் இருந்து அந்த பரிசை பறிக்க முடியாது என கூறியுள்ளார்.
மியான்மரில் ஆங்சாங் சூகி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியதால் 1991-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அங்கு தற்போது இடம்பெற்று வரும் வன்முறைக்கு எதிராக அவரது நோபல் பரிசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval