சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஜிஎஸ்டியில் பயணிக்கும்போது செங்கல்பட்டுக்கு முன்பாக முதல் சுங்கச் சாவடி (பரனூர்) வரும். சுங்கம் வசூலிக்கும் காலம் முடிவடைந்ததால் இங்கே சுங்கம் வசூலிக்கக் கூடாதென்று நீதிமன்ற உத்தரவு இருந்தது. இடையில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று கூண்டுக்குள் அமர்ந்து பணம் வாங்கிப் போடத் தொடங்கிவிட்டார்கள். விசித்திரம் என்னவென்றால் நீங்கள் பணம் தந்தால் வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் அவரவர் பாட்டுக்கு போகிறார்கள். அவர்களும் கேட்க மாட்டார்கள். நான் இதுவரை பலரை அப்படி பார்த்திருக்கிறேன். உங்களை மறிக்க திறந்து மூடும் கேட் கூட அங்கு இல்லை. அப்பாவியாக பணம் தருபவர்களிடம் வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் தரும் ரசீதுகள் குறித்தும் எனக்கு சந்தேகம் உள்ளது. அருகிலேயே காவல்துறை வாகனமும் எப்போதும் நிற்கிறது. இதை அடுத்து மதுராந்தகம் தாண்டி உள்ள சுங்கச் சாவடியிலும் ஏற்றி இறக்கும் கதவு இருக்காது. இதுபோல் அங்கும் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கு இப்போது உஷாராக கூண்டுக்கு வெளியே வாகனங்கள் வெளியேறும் இடத்தில் அமர்ந்து மூன்று பேர் வசூல் செய்கிறார்கள். அவர்கள் யாரையும் பார்த்தால் சுங்கம் வசூலிக்கும் ஆட்கள் போலவும் இல்லை. இந்த முறை வரும்போது அங்கு க்ரெடிட் கார்டைக் கொடுத்தேன். அவசரமாக திருப்பித் தந்து போகச்சொல்லிவிட்டார்கள். இந்த இரண்டு சுங்கச் சாவடிகளிலும் ஏதோ நடக்கிறது. அதற்கு அதிகாரிகளும் உடந்தை என்றே தோன்றுகிறது.
சில கேள்விகள்:
இந்த சுங்கச்சாவடிகளில் ஏன் வண்டிகளை தடுக்கும் ஆட்டோமேட்டிக் கதவு இல்லை? அல்லது வேலை செய்வதில்லை?
ஏன் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வாங்குவதில்லை?
ஏன் கூண்டுக்கு வெளியே அமர்ந்து வசூல் செய்கிறார்கள்?
பணம் தராமல் செல்லும் வாகனங்களை ஏன் தடுப்பதில்லை?
ஏன் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வாங்குவதில்லை?
ஏன் கூண்டுக்கு வெளியே அமர்ந்து வசூல் செய்கிறார்கள்?
பணம் தராமல் செல்லும் வாகனங்களை ஏன் தடுப்பதில்லை?
ஒருவேளை எல்லாம் சரியாகவும் இருக்கலாம். எல்லாமே என் அனுமானமாகவும் இருக்கலாம். விஷயம் அறிந்தவர்கள் அல்லது துறை சார்ந்தவர்கள் விளக்கலாம்.
எனவே அடுத்த முறை இந்த இரண்டு சாவடிகளைக் கடந்தால் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டைக் கொடுத்துப் பாருங்கள். நியாயமான முறையில் வசூல் நடக்கிறதென்றால் வாங்கிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அனுமதி இலவசம். இதில் இன்னொரு சவுகரியமும் உள்ளது. சில சுங்கச் சாவடிகளில் கார்டைக் கொடுத்தவுடன் மெஷின் வேலை செய்யவில்லை என்கிறார்கள். பணமே இல்லை என்று பிடிவாதம் பிடித்தால் சரி போங்க என்று அனுப்பிவிடுகிறார்கள். இது எல்லா சுங்கச் சாவடிகளிலும் நடக்கிறது.
- Shan Karuppusamy எழுதியது
courtesy;
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval