Monday, September 4, 2017

தூக்கம் வரலையா?! இதையெல்லாம் ஃபாலோ அப் பண்ணுங்க...

தூக்கம் வரலையா?! இதையெல்லாம் ஃபாலோ அப் பண்ணுங்க...தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்த கட்டுரை!ஏன் தூக்கம் வருகிறது என்பதற்கும், ஏன் தூக்கம் வரவில்லை என்பதற்கும் பல நுட்பமான காரணங்களை அடுக்குகிறார்கள் நிபுணர்கள்.
தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்த கட்டுரை!ஏன் தூக்கம் வருகிறது என்பதற்கும், ஏன் தூக்கம் வரவில்லை என்பதற்கும் பல நுட்பமான காரணங்களை அடுக்குகிறார்கள் நிபுணர்கள். சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவம் இரண்டிலுமே இந்த செக் - லிஸ்ட்டை வைத்திருக்கிறார்கள் என்பதும், இவை எளிதாக எல்லோராலும் பின்பற்றக் கூடியவை என்பதும் கூடுதல் விசேஷம்.  தெரிந்துகொள்வோமே....தூக்கம் வர பொதுநல மருத்துவர் சுந்தர ராமன் சொல்லும் சில எளிய சூட்சுமங்கள்... ‘‘இயற்கையில் நம் உடல் தூங்குவதற்கான சூழல் அமையும்போதுதான் நன்றாகத் தூங்குகிறது. உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் சூழல்ரீதியாகவும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்போது நமக்கு தூக்கம் வருகிறது. இதை  தூக்கத்துக்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள் என கூறுகிறோம். 
தூங்கக்கூடிய இடம் அவரவர் வசதிக்கேற்ப இருந்தாலும் தூங்குகிற இடம் அமைதியாக இருக்க வேண்டும். வெளிச்சம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். தூங்கக்கூடிய இடத்தில் தட்பவெப்பநிலை சீராக இருக்க வேண்டும். மிகுந்த குளிரோ, அதிக வெப்பமோ இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கும்.தூங்கக்கூடிய இடம் மேடு, பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு காபி, டீ எடுத்துக்கொள்ளக் கூடாது. பருத்தி ஆடை உடுத்தி தூங்க வேண்டும். ஏசியில் தூங்குவதை விட மின் விசிறி சிறந்தது. காற்றோட்டமான இடத்தில் தூங்குவது இன்னும் ஆரோக்கியமானது.
அதுபோல கட்டில், பெட் சீட், படுக்கை விரிப்புகள், பாய், தலையணை போன்றவைகளை சூரிய வெளிச்சத்தில் வைக்கும்போது படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருக்கும். இது ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே, வாரம் ஒரு முறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும்’’ என்கிறார்.‘எப்படி தூங்க வேண்டும்? எதில் தூங்க வேண்டும் என்பதற்கும் வரையறைகள் இருக்கிறது’ என்கிறார் சித்த மருத்துவர் ஸ்ரீதேவி.
‘தூங்கும்போது அவரவர் வசதிக்கேற்ற முறையில் படுத்துக் கொள்ளலாம். ஆனால், பொதுவாக இடது பக்கமாக படுப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதனால், இடது பக்கமாகப் படுத்து உறங்குவதே நல்லது.
அதேபோல் கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். வடக்கு மற்றும் மேற்கு திசைகள் குறைவான தூக்கத்தைக் கொடுப்பவை. தூக்கத்தைக் கெடுக்கும் திசைகள் என்றும் சொல்லலாம். காரணம், புவியின் காந்த சக்தியுடன் இந்தத் திசைகள் தொடர்புடையவை என்பதால் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் தலைவைத்துப் படுப்பதே நல்லது.
உறங்கும்போது முழுவதுமாக போர்வையை மூடி உறங்குவது நல்லது அல்ல. போர்வையை முழுவதுமாக மூடி உறங்கும்போது, நாம் சுவாசிக்கும் அசுத்த காற்று மீண்டும் மீண்டும் சுழற்சி அடைவதால் உடலின் சக்தி குறைவதற்கும், இதயம் பலவீனமாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.மெல்லிய போர்வை, காற்றுபுகும் பருத்தி கம்பளங்கள் போன்றவற்றால் முக்காடிட்டு தூங்குவது சிறந்தது.எதில் தூங்க வேண்டும் என்பதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. சுத்தமான, காற்றோட்டமான, அமைதியான இடங்களில் கட்டிலில் துயில்வது நல்லது. ‘உடம்பைத் தூக்கி கடம்பில் போடு’ என்பதற்கு ஏற்ப கடம்பு மரத்தால் செய்த கட்டில் தூக்கத்துக்கு நல்லது. கடம்பு கட்டில் மேடுபள்ளம் இல்லாமல் சமமானதாக இருப்பதாலும், குளிர்ச்சி, சூடு எல்லாவற்றையும் சமமாக கடத்துவதாலும் உடலுக்கு நன்மை பயப்பதாக உள்ளது.
இலவம்பஞ்சு மெத்தையில் படுப்பது உடலை குளிர்ச்சியாக வைக்கும். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் இலவம் பஞ்சு மெத்தை சிறந்தது. இலவம்பஞ்சைப் போலவே கோரைப் பாயும் உடல் சூட்டைத் தணிக்கும். உணவு செரியாமை, உடலில் ஏற்படும் கட்டிகள், அதிக பித்தம் ஆகியவற்றையும் நீக்கும். எல்லோருக்கும் எளிதானதும் கூட!பிரம்பு பாய் உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து மூலம், சீதபேதி, சீதசுரம், தலை பாரத்தை போக்கும். ஈச்சம்பாய் உடலை உலர்த்தும், உஷ்ணம் உண்டாக்கும். மூங்கிலால் செய்த பாய் சிறுநீரக நோய்களை அகற்றுவதோடு, பித்தத்தையும் குறைக்கிறது. தலையணை கழுத்துக்கும் தோளுக்கும் மத்தியில் இருக்கும் அளவு உயரம் உடையதாகவும், நீளமானதும் கனம் உடையதாகவும் இலவம் பஞ்சினால் ஆனதாகவும் இருப்பது நன்று. குழந்தைகளுக்கு சற்று மிருதுவாக இருப்பது நன்று.
கம்பளங்கள் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தபடி இருத்தல் வேண்டும். குளிரைத் தாங்கவும், பசியைத் தூண்டவும், ரத்த தாதுக்களை தூண்டி ரத்த சோகையை நீக்கவும் பஞ்சவர்ண ரோம கம்பளங்கள் பயன்படும். குளிர்காலத்தில் ஏற்படும் நடுக்கம் மற்றும் காய்ச்சலுக்கும் இவை மிகுந்த பயன் தரும்’’ என்கிறார்.இனிமேலாவது நல்லா தூங்குங்க மக்காஸ்...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval