Wednesday, November 1, 2017

பொறுப்பான மனைவி யாருக்கெல்லாம் அமைந்தார்களோ அவர்களே இவ்வுலகின் பாக்கியம் பெற்றவர்கள்.😂

0/31/17, 10:41:10 PM: Irfan: 😳அரபு நாடுகள் கடுமையான பொருளாதார வீழ்ச்சி, அதனாலும், அல்லாமலும் பல பிரச்சனைகள் வெளிநாட்டில் வேலை செய்யும் நம் சகோதரர்கள் அனுபவிக்கிறார்கள்.

பலர் வேலை இழக்கின்றனர்,சம்பளம் குறைவு ,இன்னும் பல. இதனால் மனக்குழப்பத்திலும் , கவலையில் ஆகின்றனர்.

குடும்ப சூழ்நிலை மேலும் மேலும் அவர்களை மனஅழுத்தத்தில் கடும் அவதிபடுகின்றனர்.
இதற்கு சில தீர்வுகள்.

1.💶குடும்ப செலவு குறைப்பது முக்கியம் .

2.📱எது தேவை,எது தேவையில்லை என்பதை தீரமானிக்கவேண்டும்

3.🚗வீட்டில் வாகனங்கள், எண்ணம் குறைக்கவும்.

4.📲மொபைல் போன் எண்ணம் 
.
5.💶தனியார் கல்விநிலையங்களின் அதிகமான கட்டணம் ஆராய்ந்து குறைந்த கட்டணம் தேர்வு செய்வதோ..,அரசு பள்ளிகளில் சேர்ப்பதோ செலவு குறைப்பதற்கு உதவும்

6.🚍தனியார் ஸ்கூல் பஸ் தவிர்க்கவும், அரசு தரும் பஸ் பாஸ் பயன்படுத்தவும் பிள்ளைகளை பழக்கவும் வேண்டும்.

7.📺வீட்டில் மின் செலவு குறைப்பதற்கு தேவையற்ற பல்புகள் ,பேன்கள்,தரும் செலவு குறைக்கவும்.

8. 🍜ஹோட்டல் உணவுகள் ஆர்டர் செய்வதும்,அதில் ருசி தேடி அலைவதும் தவிர்க்கவும்.

9.🚙🏍பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கும்,மார்கெட், அக்கம் பக்கம் போவதற்கும் வாகனம் தேவை எனும் நிலை மாறி நடப்பதற்கு முயற்சி துவங்க வேண்டும்.

10.🍲🍦🍵விருந்தனரை உபசரிப்பதில் தவறில்லை, விருந்தினர் உண்பதற்காகவே அல்லாமல் அவர்கள் பார்ப்பதற்கும் தங்களுக்கு பெருமை அடிப்பதற்க்கும் கூடாது

11.🍟🍱ஷ்பெஷல் ஐட்டம் சமைப்பதைதவிர்க்கவும்

12.💊💉ஆஸ்பத்திரி செலவு நோய் தீர்ப்பதற்காகவே அல்லாமல் பெரிய ஆஸ்பத்திரி பைவ் ஸ்டார் வசதி தேடகூடாது.

13.💵🗒மாதத்தில் வாங்கும் பொருள்களின் தேவையும்,தேவையற்றதையும் பிரித்தறிந்து எது மிகவும் தேவையோ அதிலும் எவ்வளவு தேவையோ அதிலும் சிறிது அளவும் குறைத்து வாங்கும் மனநிலை வேண்டும்

14.💸எது வாங்கினாலும் விலை கேட்டு விசாரித்து எக்ஸ்பைய்ரி தேதி பார்த்து வாங்கவும்

15.🤑சிக்கனம் என்பதை அவமானமாக கருதவேண்டாம்.

16.🙇🏼தொடர்ந்து ஒரே கடையில் சாதனங்கள் வாங்குவதை தவிர்த்து எது எங்கு நமக்கு பயனாகுமோ விசாரித்து வாங்கவேண்டும்.

17.👨‍👩‍👧‍👧உறவினர் வீட்டிற்க்கு தேவைக்கு போய்வர வேண்டும் அதற்காக பெருமைக்காக சாதனங்கள் வாங்குவதில் நம் நிலமைக்கேற்றவாறு செயல்படவும்

18.🍎?🍩?உறவினர்களுக்கு உபயோகம் இல்லாமலும் அவர்களுக்கு மனக்கவலை தரும் விதத்திலும் பொருள்களையும்,உணவு பண்டங்களையும் பரிசளித்து இருபுறமும் வீணவிரயம்்் செய்வதையும் தவிர்க்கவும்.

19.💷உறவினர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு வீண் செலவும் மனக் கவலையும் கொடுக்கவேண்டாம்.

20.🌿🌴🐸?🐔?முடிந்தால் வீட்டு முற்றத்தில் காய்கறி தோட்டம் வைப்பதும் ,சிறிய வருமானத்தை எதிர்பார்த்து கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு ஆகியவற்றிர்க்கு உங்களை தயார் படுத்தலாம்.

21,👜உண்டியல் வசூல் ,காணிக்கை, நேர்ச்சை என்பதை எல்லாம் உங்கள் நிலமையின் வருனத்தை உணர்ந்து செயல்படவும்.

22,🏤வீட்டில் அழகு அதிகரிப்பதற்கு மாற்றி மாற்றி கட்டிட வேலை நடத்துவது,அலங்கார பொருளை வாங்கி சேர்ப்பது தவிர்க்கவும்.

குறிப்பு: மேலே கூறப்படும் அனைத்தும் கடைபிடிக்க பலரால் முடிவதில்லை, ஆனால் ஒருவர் நினைத்தால் கண்டிப்பாக முடியும்.
அவர்தான் வெளிநாட்டில் வேலை செய்பவரின் 🙎🏼மனைவி

அவர் நினைத்து விட்டால் இதுவும் இதற்கு மேலேயும் சிக்கனம் கடைபிடிக்க வழிகிடைக்கும்.

🙎🏽‍♂கணவரின் வருமானம் அறிந்து செலவு செய்து குடும்ப பொறுப்பினை உணர்ந்து பொருளாதாரத்தில் குடும்பத்தினை உயர்தும் மனைவி யாருக்கெல்லாம் அமைந்தார்களோ அவர்களே இவ்வுலகின் பாக்கியம் பெற்றவர்கள்.😂


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval