தஞ்சையில் 44 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சாந்தபிள்ளை ரயில்வே கேட் பகுதியில் மக்கள் நெரிசலால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து,
நீண்டகால கோரிக்கைக்கு பின்னர், கடந்த 2014ம் ஆண்டு 44 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
பணிகள் முடிவடைந்து இம்மாதம் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாலத்தை திறந்துவைக்கவுள்ள நிலையில், பாலத்தின் மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval