Wednesday, November 8, 2017

​ஹைதராபாத் நகரில் இன்று முதல் பிச்சை எடுக்க தடை..!


Imageஹைதராபாத்  சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் நகர சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாலும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதாலும், பிச்சை எடுப்பதற்கு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் நகரில் வரும் 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு 8வது உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது, 
இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி அங்கு பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி இதற்கான ஆணையை நேற்றிரவு பிறப்பித்துள்ளார். அதில், ஹைதராபாத் நகரின் பொது இடங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி (2018) வரையிலும் பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மீறுவோர் மீது இந்திய தண்டணை சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval