Friday, November 24, 2017

இஸ்லாமிய சட்டங்கள் யாவும் அனைத்து மக்களுக்கானவை!

Image may contain: 2 people, people smiling, textநிருபணமாகிறது நிகழ்வுகளால்..!
கந்துவட்டி கொடுமையால் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் திரைத்துறையை சார்ந்த அசோக் குமார். இதற்கு பலரும் பலவித ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் நடிகர் பார்த்திபன் கந்துவட்டி கொடுமையைத் தீர்க்க என் யோசனை என்று ஒருவருக்கொருவர் உதவும் கூட்டுறவு திட்டம்” ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் பார்த்திபனுக்கு முதலில் நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம். எதற்காகவெனில் எப்பொழுதெல்லாம் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு தீர்வாக மக்கள் கேட்பது இஸ்லாமிய சட்டத்தையே!
தெரிந்தோ தெரியாமாலோ நடிகர் பார்த்திபனும் அந்த சட்டத்தையே வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் பார்த்திபனின் யோசனையை 1438 வருடங்களுக்கு முன்பே சட்டமாக வலியுறுத்தியுள்ளது இஸ்லாம். இந்தியாவிலும் சில இடங்களில் முஸ்லிம்களிடையே இந்த நடைமுறை உள்ளது. பைத்துல் மால் Bayt al-mal என்ற பெயரில்.
இந்த திட்டத்தை இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்தவே இஸ்லாமிய வங்கிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் கந்து வட்டியை நம்பியே பிழைப்பு நடத்தும் வங்கிகள் மூடப்பட்டுவிடும் என்பதால் இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதியில்லை என்று சமீபத்தில் அறிக்கை விட்டது பாசிஸ அரசாங்கம்.
எது எப்படி இருப்பினும், தாங்கள் பாதிக்கப்படும் போது இஸ்லாமிய சட்டத்தையே அனைவரும் முன்மொழிகின்றனர்.
திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலை, நிர்பயா வழக்கு என இதற்கான சான்றை அடுக்கி கொண்டே போகலாம்.
இஸ்லாமிய சட்டம் மட்டுமல்ல! இஸ்லாமிய மார்க்கமும் அனைவருக்குமானதே!
- உங்களில் ஒருவன்
TNM Media தமிழ்நாடு
2017-Nov-24|10:19:25PM

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval