குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவியுள்ளனர். பெற்றோர்களே உஷார்………!!!*
_*திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கண் தெரியாதவர்கள் போன்று வேடமனிந்து வந்த இரு மர்ம நபர்களால் 15 வயது பள்ளி மாணவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளான்.*_
_கடந்த 24-11-2107, வெள்ளிக்கிழமை அன்று முத்துப்பேட்டையில் உள்ள ரஹ்மத் தனியார் பள்ளிக்கூடத்திற்க்கு அருகாமையிலே சரியாக இரவு 8:45 மணியளவில் அதே ஊரை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்பவரின் மகன் அல் பாஸித்(15) என்ற சிறுவன் நின்றுக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனை நோக்கி வந்த இரண்டு நபர்கள் தங்களுக்கு கண் தெரியாதென்றும் எங்களை பட்டுக்கோட்டை செல்லக்கூடிய பேருந்திலே ஏற்றி விடுமாறும் உதவி கேட்டுள்ளனர். அந்த சிறுவனும் அவர்களுடைய பேச்சை நம்பி கையை பிடித்து பேருந்திலே ஏற்றி விடுவதற்க்காக கூட்டி சென்றுள்ளான். அப்போது அந்த திருடர்கள் தன் கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை அந்த சிறுவனின் விலாப்புறத்தில் வைத்து சப்தம் போட்டால் ஒரே சொருவாக சொருவாகி விடுவோம் என்பதாக சொல்லி மிரட்டி அச்சிறுவனையும் பேருந்தில் ஏற்றி கூட்டி சென்றுள்ளனர். அதுவரையிலுமே அல் பாஸித் என்ற சிறுவனுக்கு நடந்த சம்பவங்கள் நியாபகத்தில் இருந்துள்ளது._
_வீடு திரும்பிய அச்சிறுவனிடம் பிறகென்ன நடந்தது என்று குடும்பத்தினர்கள் கேட்க்கையில் அந்த சிறுவன் கூறி இருக்கின்றான். என்னை பஸ்ஸில் ஏற்றியது வரையில்தான் எனக்கு நடந்த சம்பவங்கள் நியாபகத்தில் உள்ளது. பிறகு கண் விழித்து பார்க்கையில் நான் தஞ்சாவூர் பஸ் நிலையத்திற்க்கு அருகாமையில் அமைந்திருக்கக்கூடிய ஒரு ஃப்ளாட் பாரத்தில் படுத்திருந்தேன். திருச்சி…திருச்சி…என சப்தம் கேட்டது அப்போதுதான் நான் தஞ்சாவூர் ஃப்ளாட் பாரத்தில் கிடந்ததையே உணர்ந்தேன். என்பதாக கூறியுள்ளான்._
_பிறகென்ன நீ செய்தாய் என அச்சிறுவனிடம் மேற்க்கொண்டு விசாரிக்கையில் அச்சிறுவன் கூறியுள்ளான் ஒருவரிடம் சென்று ஒரு ரூபாய் கேட்டேன் அவர் என்னிடம் இல்லையென மறுத்து விட்டார். மற்றொருவரிடம் சென்று நடந்ததை எடுத்து கூறி அவரிடம் ஒரு ரூபாய் கேட்டேன் அவர் எனக்கு பத்து ரூபாயை எடுத்து கையில் தந்தார் எனக்கு பத்து ரூபாய் வேண்டாம் ஒரு ரூபாய் மாத்திரம் போதுமென அந்த ரூபாயை வாங்கி வந்துதான் உங்களுக்கு பொது தொலைப்பேசியிலிருந்து நடந்ததை எடுத்துரைத்தேன் பிறகு நீங்கள் காரில் வந்து என்னை மீண்டும் முத்துபேட்டைக்கு அழைத்து வந்து விட்டீர்கள் என்பதாக கூறியுள்ளான். அதை கேட்ட குடும்பத்தினர் சிறுவனுக்கு அவர்களால் என்ன நேர்ந்திருக்கும் என்ற அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். பாதிக்கப்பட்ட அல் பாஸித் என்ற அந்த சிறுவனும் தற்ப்போது வரையிலும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துள்ளான். அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதே இப்போது வரை யாருக்குமே புறியாத ஓர் புதிராக உள்ளது._
*இதுபோல குழந்தைகளை கடத்தும் திருட்டு கும்பல் தமிழகத்தில் பல்வேறு, இடங்களில் பதுங்கியுள்ளனர். சந்தர்ப்பம் அமையும் வேளையில் கைக்கு சிக்கக்கூடிய குழந்தைகளை மிகவும் லாவகமாக கடத்திச்சென்று விடுகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியாக எங்குமே அனுப்பி வைத்து விடாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனமுடனும் அவர்களை கண்கானித்துக்கொள்ளுங்கள்.*
நன்றி கோட்டைப்பட்டிணம் அஜ்மல் கான்
*முத்துப்பேட்டை தகவல் மையம்*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval