கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக்கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள்.
அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..
அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..
இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை.அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?
மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன..
அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.
அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே..
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்..
அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து.மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக்கொள்வதே சிறந்தது
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval