கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.ஜே.ஜெயராஜ், இவர் தன்னுடைய அலுவலக காரில் கடந்த மாதம் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கரா பகுதியில் சென்றுகொண்டிருந்தார். தாறுமாறாக கார் ஓடியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகளால் இவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்போது ஐ.பி.எஸ் அதிகாரியான ஜெயராஜ் மற்றும் ஓட்டுநர் சந்தோஷ் ஆகியோர் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாக தெரியவருகிறது.
காவல்துறை அதிகாரிகள் காரை தடுத்து நிறுத்தியபோது ஐ.பி.எஸ் அதிகாரியால் வெளியே வரக்கூட முடியாத நிலையில் அவர் தள்ளாடியதாக கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனையின் முடிவில் இருவரும் மது குடித்திருந்தது உறுதியானது. இதன் காரணமாக இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கேரள மாநில டி.ஜி.பி லோக்நாத் பெகேரா, முதல்வர் பினராயி விஜயனுக்கு பரிந்துரைத்தார்.
டிஜிபி-யின் பரிந்துரையின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயராஜ் மற்றும் ஓட்டுநர் சந்தோஷ் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜெயராஜ் வடக்கு மண்டல (குற்றப் பிரிவு) ஐ.ஜி-யாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval