Thursday, November 23, 2017

எது நல்லது?

நம் வீட்டுப் பெண்கள் காலையில் எழுந்து சாயாவுக்கு இஞ்சி, ஏலம் இடித்துப் போட்டு அல்லது காஃபி போட்டு நமக்கு தந்து விட்டு, அடுத்து காலை பசியாற இட்லி, தோசைக்கு மாவரைத்து, அதை உண்வதற்கு உலை வைத்து, தோசை கல்லை சூடாக்கி, அதில் தோசையை சரியாக வருவதற்கான பக்குவத்தை செய்து, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னிக்கான ஏற்பாடு, இல்லாட்டி இடியப்பம் அவிக்கிற வேலையோ, ஆப்பம், கறி அடை, உப்புமா என ஏதாவது ஒன்றை செய்து முடிக்கணும். இடியப்பத்திற்கு தொட்டுள்ள கோழி ஆணாம், ஆட்டுக்கால்பாயா, கிடா கறி ஈரலை வதக்குதல் என ஏதாவது செய்ய வேண்டும். சில வீடுகளில் பால் பாயசமும் பண்ண வேண்டும்.
பகலைக்கு சோறு ஆக்கி, ஏதாவது காய்கறிகளை கொண்டு துணைக்கறி ஆக்கி, புளியாணம், தயிர் பச்சடி, பொறியில், கோழி, கறி, மீன் இவைகளில் ஏதாவது ஒன்றில் ஆணம், பொறித்த இறால் என ஒரு பெரும் படையல் செய்ய வேண்டும். விஷேட நாட்களில் சொல்லவே வேண்டாம். தடபுடலாக பிரியாணி, வட்டிலப்பம், வெள்ளடை, கறி அடை. சும்மா கலைகட்டும்.
இரவு உணவாக மீண்டும் இடியப்பம், இட்லி, தோசை அதுக்கு தொட்டுள்ள சாம்பார், சட்னி, ஆணம் என ஏதாவது ஒன்றை செய்து ஆக வேண்டும். இது போதாது என மாலையில் வடை, சமூசா, சுண்டல், பலகாரம் என ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நம் குடும்ப பெண்கள். தூக்கம் போக மீதம் உள்ள 16 மணி நேரத்தில் 12 மணி நேரம் சமையல்கட்டில்தான் காலத்தை ஓட்டியே ஆகணும் என்ற ஆகி விட்டது.
இது பொருள் செலவையும், கால விரயத்தையும் செய்கிறது. அத்தோடு இந்த உணவுகளில் 80 சதவீதம் சர்க்கரை, கொழுப்பை உருவாக்கி நிரந்தர நோயாளியாக மாற்றும் தன்மை உள்ளது. நோயாளி ஆகி விட்டால் மருத்துவத்திற்கே எக்கசக்கமான பணம் செலவாகும்.
இது அல்லாத மாற்று வழி ஒன்றை நான் சொல்கிறேன். உதாரணத்திற்கு நாம் எல்லோரும் பேலியோ உணவு முறைக்கு மாறி விட்டோம். என்ன நடக்கும் (ஒரு கற்பனை)
காலையில் ஒரு தேனீர் இனிப்பு இல்லாமல் போட்டு அதில் 50 கிராம் வெண்ணை அல்லது இரண்டு கரண்டி நெய்.
காலை பசியாற நாலு முட்டையை அவித்து கொஞ்சம் உப்பு, மிளகு போட்டு சாப்பிட்டால் போதும். இல்லாட்டி நாலு முட்டையை ஆம்லெட் இல்லாட்டி ஒரு டம்ளர் கட்டி தேங்காய் பாலில் இரண்டு கரண்டி நெய், ஒரு வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் முடிந்தது காலை பொழுது.
பகலில் பசித்தால் ஒரு கோழி, கறி, மீன் என ஏதாவது ஒன்றை ஆக்க வேண்டியது (பேலியோவுக்கு அதிக மசாலா சாமான்கள் வேண்டாம். மஞ்சள், மிளகு, சீரகம் போன்றவை போதும்) ஒரு காய்கறி கூட்டு, புளியாணம் அல்லது ரசம் காய்கறி சாலெடு என மிக எளிய முறையில் சமைத்தால் போதும்.
இரவில் ஊற வைத்த 100 பாதாம் பருப்பை நெய்யில் வதக்கி சாப்பிடலாம், ஒரு டம்ளர் பாலில் மஞ்சள், வெள்ளை பூண்டு போட்டு காய்ச்சி குடித்து விட்டு படுக்கலாம்.
இந்த உணவுமுறையில் கால நேரம் ரெம்ப மிச்சம். ஆரம்பத்தில் கொஞ்சம் பொருள் செலவு இருந்தாலும் பேலியோ டயட் ஒரு செட்டப்புக்கு வந்த பிறகு செலவு ரெம்ப ரெம்ப குறைந்து விடும்.
மிக மிக ஆரோக்கியம் நிறைந்தவை. நோய்கள் அண்டாது, மருத்துவச் செலவுக்கு வேலையே இல்லை.
ஜமீல் முஹம்மதாகிய நான்.கடந்த 9 மாதமாக பின்பற்றி வரும் பேலியோ உணவுமுறையில் நான் கண்ட உண்மைகள். பிடித்தவர்கள் பின்பற்றலாம்.
வஸ்ஸலாம்.
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval