Saturday, November 25, 2017

ஒரு குட்டி கதை மனிதன்

கடவுள்:  கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.  " நீ
 கழுதையாகப் 
                பிறந்து நாள்
          முழுவதும்
பொதி சுமப்பாய்
உனக்குசிந்திக்கும்
திறனே கிடையாது. புல்லைத் தின்று
50ஆண்டுகள் 
              வாழ்வாய்."

கழுதை:
கழுதையாகப் பிறந்து
50ஆண்டுகள் வாழ
விருப்பமில்லை.
20ஆண்டுகளே 
                    போதும்.
கடவுள்:அப்படியே
ஆகட்டும்.

கடவுள்:நாயைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ  
மனிதனின்
வீட்டை பாதுகாத்து
அவனுக்கு நல்ல.
நணபனாய்
                  இருப்பாய்.
மனிதன் தரும்
மிச்சமீதிகளை
                        உண்டு
30ஆண்டுகள் 
                  வாழ்வாய்."
நாய்:30ஆண்டுகள்
எனக்கு அதிகம்.15
ஆண்டுகளே போதும்.
கடவுள்:அப்படியே
                      ஆகட்டும.


கடவுள்:
                    குரங்கைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ
மரங்களில்
கிளைக்கு கிளைதாவி
குழந்தைகளை
மகிழ்விப்பாய்.20
ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."

குரங்கு:எனக்கு10
வருடங்களே போதும்
                      சாமி.
கடவுள்:அப்படியே
ஆகட்டும்.


கடவுள்:
              மனிதனைப்
படைத்தார்."நீ
சிந்திக்கும்
ஆற்றலுடன் 
              பிறப்பாய்.உன்
அறிவைப் 
  பயன்படுத்தி எல்ல
உயிர்களையும் 
உன்கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய்.
20ஆண்டுகள் உயிர்
          வாழ்வாய்."
மனிதன்:"சாமி.
20வருடம் எனக்கு 
ரொம்ப குறைவு.
கழுதை
வேண்டாமென்று
சொன்ன 30
வருடங்களையும்,
நாயின்
15வருடங்களையும்,
குரங்கின்10
வருடங்களையும்
எனக்கு தாருங்கள்."
கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
*அன்றிலிருந்து
மனிதன்20வருடங்கள்
மனிதனாகவும்,

*பின்திருமணம்
செய்து30 ஆண்டுகள்
கழுதையைப்
போல குடும்பப்
பாரம் சுமந்தும்,

*குழந்தைகள்
வளர்ந்த பின்15
ஆண்டுகள்.
நாயைப் போல
வீட்டைப் பாதுகத்தும்,

*கடைசி10 வருடங்கள்
குரங்கைப் போல
தான்.
ஒவ்வொருமகன்
அல்லதுமகள் வீடு
சென்றுபேரக்

குழந்தைகளை
மகிழ்விக்கிறான்.....!!!!!


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval