சிறுவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி ( ஸ்நாக்ஸ்) பாக்கெட்டில் இலவசமாக வைக்கப்படும் சிறு பொம்மையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஈலூரு ராணி்பேட்டாவை சேர்ந்தவர் லக்ஸ்மண் ராவ். இவரது நான்கு வயது மகன் நிரிக்சன்.
தன் மகன் வழக்கமாக விரும்பிக் கேட்கும் ரிங்ஸ் என்ற நொறுக்குத்தீனி பாக்கெட்டை அன்றும் கேட்கவே, அதை வாங்கிக்கொடுத்தார். தந்தை
அந்த பாக்கெட்டை பிரித்து ஸ்நாக்ஸை சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன் நிரிக்ஸன், திடீரென மயங்கி விழுந்தான்.
உடனடியாக அவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் குடும்பத்தினர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மரணமடைந்தவிட்டதாக தெரிவித்தனர்.
அவனது உடலை பரிசோதித்ததில் தொண்டையில், ஈமோஜி டாய்ஸ் எனப்படும் சிறு பொம்மை சிக்கியிருப்பது தெரியவந்தது.
சிறுவர்களை ஈர்க்க, நொறுக்குத்தீனி நிறுவனங்கள் பாக்கெட்டில் இதுபோன்ற பொம்மைகளை வைக்கின்றன.
ஆனால் அதுவே சிறுவனின் உயிரைப் பறிக்க காரணமாகிவிட்டது.
சிறுவன் மரணத்தை அடுத்து அதை விற்ற கடைக்காரர், விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈலூரு டிஎஸ்பி வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்..
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும்போது, “பொதுவாகவே இது போன்ற ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் குழந்தைகளின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. இதை பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. தற்போது அதில் இலவசம் என்ற பெயரில் பொம்மையை வைத்து உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இது போன்ற ஸ்நாக்ஸ் பொருட்களை பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
*பெற்றோர்களே குழந்தைகளின் தின்பண்டங்களில் கவனம் தேவை*
தகவல் ;இரஃபான்
அதிரை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval