
அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.
இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.
இதன் அடிப்படையில் அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் ஆதி முத்து குடும்பத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட விரும்பினர்.
இதனால் ஆதி முத்துவின் மனைவி மாலதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உதவியை நாடினார்.
மாலதி தமது மகளுக்கு 15 வயது ஆவதாகவும், தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற தம்முடைய கணவர் விடுதலை பெற வேண்டும் என்றும் கண்ணீரோடு கூறினார்.
நிர்கதியாக நிற்கும் மாலதி, 15 வயது மகளின் வாழ்வு ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் கவனத்தில் கொண்ட காதர் மொகிதீன் மாலதிக்கு உதவும் பொருட்டு கேரளா மாநில முஸ்லிம் லீக்கை நாடினார்.
அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆதி முத்துவின் குடும்ப சூழலை விளக்கப்பட்டது. இஸ்லாத்தின்படி மரண தண்டனை கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது, மன்னிப்பது அதை விட சிறந்தது என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டப்பட்டது.
அப்துல் வாஜித் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் அப்துல் வாஜிதை பறிகொடுத்துள்ளதால் ஆதி முத்துவை மன்னிக்க ரூ. 30 லட்சம் இழப்பீடு கோரினர்.
ஆதி முத்துவின் குடும்பத்தினரும் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவர்களால் இந்த தொகையை கொடுக்க முடியவில்லை.
என்ன செய்வதென்று பார்த்த முஸ்லிம் லீக்கினர் தாங்களே ரூ 30 லட்சத்தை திரட்டி இப்பிரச்சினைக்கு முடிவு கண்டுள்ளனர்.
கொலை செய்தவர் இந்து. கொல்லப்பட்டவர் முஸ்லிம். அப்படியிருந்தும் அப்துல் வாஜித் குடும்பத்தினர் மன்னித்தனர். இந்துவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ 30 லட்சம் நிதி திரட்டி உதவி செய்தது முஸ்லிம் அமைப்பு.
அமெரிக்காவில் இதேப்போல் 10 நாட்களுக்கு முன்பு தமது மகனை கொன்றவரை இஸ்லாமிய தந்தை மன்னித்தார்.
இதுதான் இஸ்லாம் !
முகநூல் முஸ்லிம் மீடியா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval